'ஒரு செல்போன் கேம் ஆப்'...'15 வயசு பொண்ண இப்படியும் ஆக்கும்'... பெற்றோர்களை நடுங்க வைத்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Siva Sankar | Jul 22, 2019 04:40 PM

உத்ரகாண்ட் மாநில உத்தம் சிங் நகர் மாவட்டத்தில் கடந்த ஜூலையில் 15 வயது சிறுமி காணாமல் போனதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், பண்ட் நகர் போலீஸார் பல்வேறு கட்ட விசாரணைகள் செய்து சிறுமியைத் தேடி வந்தனர்.

teen girl missed after getting addicted for game app

ஒரு நாள் டெல்லியில் ஒரு டாக்ஸி டிரைவருடன் சண்டை போட்டுக்கொண்டிருந்த சிறுமியைக் கவனித்த போலீஸார், சிறுமியை விசாரித்தபோதுதான், அந்த சிறுமி உத்ரகாண்ட்டைச் சேர்ந்த சிறுமி என்றும் தெரியவந்தது. பின்னர் சிறுமியின் வீட்டாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதனிடையே சிறுமியைப் பற்றி விசாரித்தபோது சிறுமி கூறிய தகவல்கள் அதிர்ச்சியைக் கூட்டியுள்ளன. டாக்ஸி டிரைவர் -2 என்கிற கேம் ஆப்பை டவுன்லோடு செய்து விளையாண்ட சிறுமி, அந்த விளையாட்டினால் ஈர்க்கப்பட்டுள்ளார்.

பயணிகளை ஏற்றிக்கொண்டு பல சிரமங்களைக் கடந்துசென்று பத்திரமாக ஒரு இடத்தில் டிராப் செய்யும் அந்த கேமின் அனைத்து லெவல்களையும் மிகக் குறுகிய காலத்தில் சிறுமி முடித்துள்ளார். ஆனால் அதன் பின் அந்த விளையாட்டினால் பாதிக்கப்பட்டு, அதில் வருவது போலவே, வாழ வேண்டும் என்கிற ஆசையில் வீட்டில் இருந்து 12 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு வடமாநிலங்கள் முழுவதும் உள்ள சுமார் 10 நகரங்கள் சுற்றி காரிலேயே பயணம் செய்துள்ளார். குளிக்காமல், இரவில் தங்க முடியாமல் கார், ரயில் பயணம் உள்ளிட்டவற்றை செய்திருக்கிறார்.

இதனிடையே தனது சகோதரரின் ஐடியில் ரயில்களை புக் செய்திருக்கிறார். அப்படி ஜெய்ப்பூரில் புக் செய்தபோது போலீஸ் சிறுமியை ட்ரேஸ் செய்தது. ஆனால் பிடிக்க முடியவில்லை. அதன் பின்னர்தான் டெல்லியில் சிறுமி கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் பெற்றோரிடம் ஒப்படைகப்பட்டார். நெகிழந்த அந்த பெற்றோர்கள், எப்போதும் சிறுமி தன் அம்மாவின் செல்போனை கையில் வைத்துக்கொண்டிருந்ததால் இப்படி ஆகியுள்ளது. அதனால் பள்ளிப்படிப்புக்கு பின் குழந்தைகளுக்கு செல்போன்களைக் கொடுக்க வேண்டும் என்ற அனுபவத்தை கற்றுக்கொண்டதாக கண்ணீர் மல்க பேசியுள்ளனர்.

Tags : #GAME #LITTLE GIRL #ADDICTION