"என் 'பையன்' தொலைஞ்சு போய் ஒரு மாசமாகுது,,.. இன்னும் தேடிக்கிட்டு தான் இருக்கேன்.." - மனதை சுக்கு நூறாக்கும் தந்தையின் 'சோகம்'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியை சேர்ந்தவர் கமல் சிங். 60 வயதான இவரது மகன் பெயர் ஹிமான்ஷு கதம் (Himanshu Kadham).
ஹிமான்ஷு பொறியாளராக பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்த போது, பாலம் ஒன்றில் வைத்து, அதன் மீது வந்த மழை நீரில் அடித்து செல்லப்பட்டார். அங்கிருந்தவர்கள் மழை நீர் உள்ளதால் தற்போது கடக்க வேண்டாம் எனக் கூறியும் கேட்காமல், ஹிமான்ஷு அந்த பாலத்தை கடக்க முயன்றதாக தெரிகிறது.
மகன் காணாமல் போன தகவல் மறுநாள் காலையில் செய்தித்தாள் பார்த்த பிறகு தான் கமல் சிங்கிற்கு தெரிய வந்தது. உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் நடத்திய மீட்புப் பணியில் ஹிமான்ஷுவின் பைக் மற்றும் ஃபேக் ஆகியவை மட்டுமே கிடைத்தன.
ஆற்று நீரில் ஹிமான்ஷு அடித்துச் செல்லப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் இதுவரை அவர் கிடைத்த பாடில்லை.கடந்த ஒரு மாத காலமாக, நீரில் அடித்துச் செல்லப்பட்ட தனது மகனைத் தேடி, இந்தூர் பகுதியிலுள்ள அனைத்து ஆற்றங்கரைகளுக்கும் சென்று தேடிக் கொண்டிருக்கிறார். கமல் சிங்கின் இந்த செயல் அங்குள்ள மக்களிடையே கடும் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கமல் சிங்கிற்கு மொத்தம் இரண்டு குழந்தைகள். கடந்த ஏப்ரல் மாதம், அவரது மகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். தற்போது அவரது மகன் ஹிமான்ஷுவும் நீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அந்த குடும்பத்தை மீண்டும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது. ஹிமான்ஷுவின் வருமானத்தில் தான் குடும்பம் இயங்கி கொண்டிருந்தது. தற்போது அவரும் இல்லாத காரணத்தால் அரசின் உதவியை நாடுகிறது கமல் சிங் குடும்பம்.