'வீட்ல எல்லாரும் பாத்துட்டாங்க'... 'தந்தை போனுக்கு வந்த ஒரு மெசேஜ்'... 'பதறிப்போய் சகோதரிகள் செய்த அதிர்ச்சி காரியம்!'...
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்திய பிரதேசத்தில் 2 சகோதரிகள் ஒன்றாக தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் சியோனி மாவட்டத்தைச் சேர்ந்த 16 மற்றும் 18 வயதான 2 சகோதரிகள் தங்களுடைய காதல் விவகாரம் வீட்டிற்கு தெரியவந்ததால் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அவர்களுடைய உடல்கள் கிராமத்திலுள்ள ஒரு கிணற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில், சம்பவத்தன்று சகோதரிகளில் ஒருவருடைய காதலர் அவர்களுடைய தந்தையின் போனுக்கு மெசேஜ் ஒற்றை அனுப்பியதும், சகோதரிகளில் ஒருவருக்காக வந்த அந்த மெசேஜை அவர்களுடைய தந்தை பார்த்ததும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து வீட்டிலுள்ளவர்களும் அந்த மெசேஜைப் பார்த்துவிட, தங்களுடைய காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வந்ததால் பதற்றமடைந்த சகோதரிகள் வீட்டை விட்டு கிளம்பி வெளியே சென்றுள்ளனர். பின்னர் அவர்களை தேடியபோது அவர்களுடைய உடல்கள் கிராமத்திலுள்ள கிணறு ஒன்றில் மிதந்த நிலையில் இருந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாகியுள்ள உயிரிழந்த சகோதரிகளின் காதலர்களை தேடி வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

மற்ற செய்திகள்
