இனி 'கவர்ன்மெண்ட்' வேல ... நம்ம 'ஸ்டேட்' பசங்களுக்கு மட்டும் தான்,,.. முதல்வர் வெளியிட்ட பரபரப்பு 'தகவல்'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவின் போது பேசிய அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், 'ஒற்றை குடிமக்கள் கணக்கீடுக்கு மாநில அரசு தயாராகி வருகிறது. அதனால், ஒவ்வொரு சலுகைக்கும் மாநில மக்கள் தனித்தனியாக பதிவு செய்ய வேண்டாம். அரசு வேலையில் மாநில மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்' என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இது தொடர்பாக இன்று பேசிய முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், 'மத்தியப் பிரதேச மாநிலத்தின் அனைத்து அரசு வேலைகளும் இனிமேல் மாநில மக்களுக்காக மட்டும் ஒதுக்கப்படும். இதற்கான சட்ட திருத்தங்கள் விரைவில் கொண்டு வரப்படும்' என தெரிவித்துள்ளார்.
மேலும், '10 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களை வைத்து மாநில இளைஞர்களுக்கு உடனடியாக வேலை வழங்கப்படும். இது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் விரைவில் மேற்கொள்ளப்படும். வேலைவாய்ப்புகள் பற்றாக்குறை இருக்கும் நிலையில், மாநில இளைஞர்கள் மீது அக்கறை செலுத்த வேண்டியது நம்முடைய கடமை' என அவர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
