'மனைவியுடன் விவாகரத்து'.. 'குழந்தைகளை' பார்க்க அடிக்கடி வந்த 'மாமியார்'.. 'மருகமகன்' எடுத்த 'அதிரடி' முடிவு! .. 'மாற்றி எழுதப்பட்ட 500 ஆண்டுகால வரலாறு'!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Sep 21, 2020 06:06 PM

கட்டிய மனைவியை விவாகரத்து செய்துவிட்டு மாமியாரை திருமணம் செய்துகொண்ட பிரித்தானியர் ஒருவர் 500 வருட வரலாற்றையே மாற்றியிருக்கிறார்.

Man marries mother in law, divorcing wife 500-year-old law overturned

பிரிட்டனில் Clive Blunden என்கிற 65 வயதான நபர் தனது மனைவி Irene Little-ஐ 1989 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். ஆனால் தனது குழந்தைகளை பார்ப்பதற்கு அடிக்கடி வீட்டுக்கு வந்த மாமியார் Brenda-உடன் அவருக்கு காதல் ஏற்பட இருவரும் சேர்ந்து வாழத் துவங்கியுள்ளனர்.

Man marries mother in law, divorcing wife 500-year-old law overturned

1997-ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தபோது Clive Blunden கைது செய்யப்பட்டார். காரணம் அங்கு மாமியாரை திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் என்பதும், அதற்காக 7 ஆண்டுகள் சிறை செல்ல நேரிடும் என்பதும்தான். இதனால் இருவரும் அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்துள்ளனர்.

Man marries mother in law, divorcing wife 500-year-old law overturned

எனினும் Clive Blunden, 500 வருடங்களாக இருந்த இந்த சட்டத்தை எதிர்த்து கடுமையாக போராடி வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2007ஆம் ஆண்டு முறைப்படி இந்த சட்டம் மாற்றப்பட்டது. பின்னர் மாமியார் Brenda-வை திருமணம் செய்து கொண்டார்.

Man marries mother in law, divorcing wife 500-year-old law overturned

அதன் பின்னர் இந்த தம்பதி 30 ஆண்டுகளுக்கு மேலாக சேர்ந்து வாழ்ந்த நிலையில் 500 ஆண்டுகளில் மாமியாரை அதிகாரப்பூர்வமாக மணந்த ஒரே மருமகன் என்கிற பெருமையையும் Clive Blunden பெற்றுள்ளார். இதனிடையே முன்னாள் மனைவியும் Brendaவின் மகளுமான Irene Little தனக்கு தாய் என்றால் யார் என்றே தெரியாது என்றும், தனது தாய் தனக்கு துரோகம் செய்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Man marries mother in law, divorcing wife 500-year-old law overturned | World News.