‘என் உயிர கொடுத்தாவது பயணிகளை காப்பாத்தணும்!!’.. ‘2 முறை தரையிறக்க போராடி, விபத்தில் உயிர்நீத்த விமானி பற்றிய ஆச்சரிய தகவல்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த முதன்மை விமானி இந்திய விமானப்படையின் முன்னால் விங் கமாண்டர் என்பது தெரிய வந்திருக்கிறது.
நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்த போது நடந்த விமான விபத்தில் முதன்மை விமானி தீபக் வசந்த் சாத்தே ( Deepak Vasant Sathe) மற்றும் துணை விமானி அகிலேஷ் குமார் (Akhilesh Kumar) உயிரிழந்துள்ளனர்.
இதில் முதன்மை விமானி தீபக் வசந்த் சாத்தே இந்திய விமானப் படையின் முன்னாள் விங் கமெண்டர் என்பது தெரியவந்திருக்கிறது. 1981 ஆம் ஆண்டு இந்திய விமானப் படையில் இணைந்து தேச பணியாற்றிய வசந்த் சாத்தே திறமை வாய்ந்த போர் விமானியாக செயல்பட்டவர் என்றும் இதற்கான விருதையும் பெற்றவர் என்பதும் தெரியவந்திருக்கிறது.
2003 ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் இருந்து ஓய்வு பெற்றதும் ஏர்பஸ் விமானியாக சிலகாலம் பணியாற்றிய இவர், கடைசியாக ஏர் இந்தியா நிறுவனத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் போயிங் ரக விமானத்தின் விமானி ஆக சேர்ந்தார்.
இந்நிலையில் தற்போது நடந்த இந்த விபத்தில் துபாயில் இருந்து வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இந்தியர்களை அழைத்துக்கொண்டு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலைய டேபிள் டாப் ஓடுதளத்தில் முதல் முறை தரையிறக்க முயற்சித்து, அது தோல்வியில் முடிந்ததால், இரண்டாவது முறை தரையிறக்க முயற்சித்துள்ளனர் விமானிகள்.
ஆனால் தரையிறக்கும்போது விமானம் ஓடுதளத்தில் இருந்து 35 அடி தூரம் விலகி பள்ளத்தாக்கில் விழுந்து விமானத்தின் முன்பக்கம் நொறுங்கியதில் 17 பேருக்கும் மேல் பலியாகியுள்ளனர்.