“பணிக்கு திரும்பிய விங் கமெண்டர் அபிநந்தன்”!... செல்ஃபி எடுத்து உற்சாக வரவேற்பு! வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Arunachalam | May 05, 2019 11:08 AM

பாகிஸ்தான் ரானுவத்திடம் சிக்கி பின்னர் விடுவிக்கப்பட்டு மீண்டும் பணிக்கு திரும்பிய விங் கமெண்டர் அபிநந்தனை பார்த்த மகிழ்ச்சியில் அவருடன் சக வீரர்கள் செல்ஃபி எடுத்து கொண்டனர்.

abhinandhan returns to his duty and share his happiness with colleague

விங் கமெண்டர் அபிநந்தன் இந்திய அரசு தனக்கு வழங்கிய மருத்துவ விடுப்பு முடிந்து பணியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில், அவரை பார்த்த மகிழ்ச்சியில் அவரது பிரிவை சேர்ந்த சக வீரர்கள் அபிநந்தனை உற்சாகமாக வரவேற்று அவருடன் செல்ஃபியும் எடுத்து கொண்டார்கள். மேலும், வீரர்கள் அனைவரும் “பாரத் மாதாகி ஜெய்” என்று முழக்கமிட்டனர்.

இதனையடுத்து, பேசிய விங் கமெண்டர் அபிநந்தன் தன்னுடன் எடுத்த புகைப்படம் உங்களுக்கு மட்டும் அல்ல உங்களுடைய குடும்பங்களுக்கும்தான் எனென்றால் உங்கள் அனைவருடைய பிராத்தனைகளால் தான் நான் இன்று சகஜ நிலைக்கு திரும்பியுள்ளேன் என்று தெரிவித்தார்.

 


 

பின்னர் பேசிய, தலைமை அதிகாரி, பல சவால்களை கடந்து இன்று மீண்டும் தன் பணிக்கு விங் கமெண்டர் அபிநந்தன் திரும்பியுள்ளார் என்று கூறினார்.

Tags : #ABHINANDHAN #WING COMMANDER #VIRAL VIDEO