'அந்த கூகுள் மேப் கொழப்பிவிட்ருச்சு'.. '3 நாள் கழிச்சு மாணவிகளை மீட்டப்போ.. ஒரு பொண்ணு மட்டும்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Aug 09, 2019 10:18 AM

கேரள வெள்ளத்தில் மீண்டும் மக்கள் கிடந்து தவிக்கும் காட்சிகள் வந்தபடி இருக்கின்றன. இதேபோல் மீட்புப் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

Kerala Army Pilot Ansha shares flood rescued experiences

இதேபோல் கடந்த வருடம் கேரளாவையே  மூழ்கடித்த கடந்த வருட வெள்ள நினைவலைகளை யாரும் மறந்துவிட முடியாது. அண்டை மாநிலங்கள் எல்லாம் கடவுளின் தேசத்துக்காக கை கொடுத்து இணக்கமாகும் வாய்ப்பினை உருவாக்கிய அந்த வெள்ளம் பல சேதங்களை உருவாக்கவும் தவறவில்லை.

அப்போது செங்கனூர் கிறிஸ்டியன் கல்லூரியில் ஒரு வாரம் பகலிரவாக மீட்புப் பணியைச் செய்தவர்தான் அன்ஷா. கோவை சூலூர் விமானப்படையின் 40வது பிரிவின் ஸ்குவாடு ரன் லீடரான அன்ஷா கடந்த கேரள வெள்ளத்தில் ஹெலிகாப்டர்களை தக்கவாறு கையாண்டு பலரையும் காப்பாற்றிய மீட்புக்குழுவுக்கு தலைமை தாங்கினார்.

கல்லூரி படிப்பு முடிந்ததும் சென்னை ராணுவ பயிற்சி முகாமில் இணைந்து, பயிற்சி முடிந்ததோடு விமானப்பிரிவுக்கு மாறி, ஹைதராபாத்தில் பயிற்சி எடுத்து, பின்னர் 2014-ஆம் ஆண்டு, கோவை சூலூரில் உள்ள விமானத் தளவாடத்தில் இணைந்தார். அப்போது 2018, ஆகஸ்ட் மாதம் 16-ஆம் தேதி, கேரளாவுக்குச் செல்லுமாறு கமாண்டிங் ஆபீசர் அன்ஷா அனுப்பி வைக்கப்பட்டார்.

கேரளா சென்று வெள்ளத்தை பார்வையிட்டு மனம் வெதும்பிய அன்ஷா, செங்கனூர் கல்லூரியில் முகாமிட்டு, உணவு, மருந்துகளுக்காக மொட்டை மாடியில் நின்று தவித்தவர்களுக்கு ஹெலிகாப்டரில் இருந்து உதவியுள்ளார். பலரையும் மீட்டுள்ளார். அப்படி ஒருமுறை கல்லூரி மாணவிகள், தங்களைக் காப்பாற்றச் சொல்லி கோரியுள்ளனர். தங்கள் இருப்பிடத்தை, கூகுள் மேப் லொகேஷனை வாட்ஸ்-ஆப் மூலம் அனுப்பியுள்ளனர்.

ஆனாலும் கூகுள் மேப் 300 மீட்டர் தொலைவில் குழப்பியடித்ததால், 2 நாட்கள் கழித்துதான் மாணவிகளை மீட்க முடிந்ததாகவும், அப்போது ஒரு மாணவி 3 நாட்கள் சாப்பிடாததால், மயக்க நிலையில் இருந்ததாகவும், இப்படி பல மறக்க முடியாத அனுபவங்களையும், பலரை காப்பாற்றும்போது நெகிழ்ச்சி உண்டானதாகவும் தமிழகம் கை கொடுத்ததாகவும் அன்ஷா இணைய இதழ் ஒன்றுக்கு பகிர்ந்துள்ளார்.

Tags : #KERALAFLOOD #KERALA #ANSHA #ARMY #PILOT