இன்ஸ்டாகிராமில் மட்டுமே ‘இத்தன’ கோடியா!... அதிகம் ‘சம்பாதித்த’ பிரபலங்கள் ‘பட்டியல்’...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Dec 30, 2019 12:49 PM

இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் 2019ஆம் ஆண்டு அதிகம் சம்பாதித்த பிரபலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

Top Earning Instagrammers 2019 Ronaldo Messi Virat Kohli

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனியார் நிறுவனங்கள் குறித்து பதிவிடுவதன் மூலமாக அதிகம் சம்பாதித்த பிரபலங்களின் பட்டியலில் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் இடம் பிடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ரொனால்டோவை 19 கோடி பேர் பின்தொடரும் நிலையில், அவர் 49 புகைப்படங்களை பதிவிட்டதன் மூலமாக 342 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார்.

அவரைத் தொடர்ந்து 2வது இடத்தில் உள்ள அர்ஜெண்டினா கால்பந்து வீரர் மெஸ்ஸி, இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலமாக 164 கோடி வருமானம் ஈட்டியுள்ளார். இந்தப் பட்டியலில் 3வது இடத்திலுள்ள அமெரிக்க மாடல் அழகி கெண்டால் ஜென்னர் 26 புகைப்படங்களை பதிவிட்டு, அதன்மூலம் 92 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார்.

இவர்களைத் தொடர்ந்து முன்னாள் கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் 4வது இடத்திலும், அமெரிக்க பாப் பாடகி செலீனா கோம்ஸ் 5வது இடத்திலும் உள்ளனர். இந்தப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி 11வது இடத்தைப் பிடித்துள்ளார். அவர் இந்த ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலமாக 7 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார்.

Tags : #INSTAGRAM #TOPPER #MONEY #VIRATKOHLI #CRISTIANORONALDO #MESSI