கேரளாவில் கண்டுபிடிக்கப்பட்ட அடுத்த வைரஸ்.. 300 பன்றிகளுக்கு நேர போகும் துயரம்??.. அதிர்ச்சி பின்னணி
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில், ஆப்ரிக்கன் பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தற்போது தகவலை வெளியிட்டுள்ளனர்.

அப்பகுதியில் அமைந்துள்ள இரண்டு பன்றி பண்ணைகளில் உள்ள பன்றிகளுக்கு, இந்த நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.
கடந்த வாரம், சுமார் 5 பன்றிகள் இறந்ததை அடுத்து, வயநாட்டில் உள்ள தவிஞ்சல் மற்றும் கனியாரம் ஆகிய பகுதிகளில் உள்ள பண்ணையில் இருந்து பன்றியின் மாதிரிகள், கால்நடை பராமரிப்பு துறையால் சேகரிக்கப்பட்டு, பின் போபாலில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டிருந்தது.
அப்போது, அந்த இரண்டு பண்ணைகளில் இருந்த பன்றிகளுக்கு ஆப்ரிக்கன் பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதனால் தொற்று நோய் பரவுவதை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கால்நடை நலத்துறை தகவல் தெரிவித்துள்ளது. பரிசோதனை முடிவில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் இரண்டு பண்ணையில் உள்ள 300 பன்றிகளை அழிப்பதற்கான வழிமுறைகளும் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
முன்னதாக, கடந்த வாரம் உத்தர பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில், பன்றிகளுக்கு ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் தொற்று பாதிப்பு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. இந்த தொற்றானது மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்காது என்றாலும், பாதிக்கப்பட்ட பன்றியுடன் தொடர்பில் இருக்கும் கால்நடை தொழிலாளர்கள், மற்ற விலங்குகள் அருகே செல்லும் போது, இந்த தொற்று நோயை பரப்பலாம் என்றும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, நடவடிக்கைகள் அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில் மாநிலங்களுக்கு இடையான எல்லை சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பிற மாநிலங்களில் இருந்து பன்றி இறக்குமதி செய்யவும் கேரள அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதல் குறித்து கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை செய்ய அறிவித்தப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு, கேரள மாநிலத்தில் ஒரு சிலருக்கு குரங்கு அம்மை தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
