திடீர்'ன்னு கேட்ட பயங்கர சத்தம்.. இரும்பு பாத்திரத்தில் காத்திருந்த அதிர்ச்சி.. குலை நடுங்க வைத்த சம்பவம்.. அதிர்ந்த கேரளா
முகப்பு > செய்திகள் > இந்தியாஅஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்தவர் பசல் ஹக் (வயது 45). இவரது மகன் சகீதுல் (22). இவர்கள் இரண்டு பேரும், கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் தங்கி, அருகே உள்ள மட்டனூரில் இருந்து பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி, விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளனர்.
இதற்காக, அப்பகுதி அருகே வீடு ஒன்றையும் பசல் ஹக் மற்றும் அவரது மகன் ஆகியோர் வாடகைக்கு எடுத்து தங்கி வந்துள்ளனர். இவர்களுடன், இன்னும் 3 பேரும் அதே வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
இவர்கள் அப்பகுதியை சுற்றியுள்ள வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து, பழைய இரும்பு பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி, தங்களின் வீட்டில் வைத்துக் கொள்வார்கள். பின்னர் அவற்றை தரம் வாரியாக பிரித்து, அதனை விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
திடீர்'ன்னு கேட்ட வெடி சத்தம்
அந்த வகையில், சமீபத்தில் பசல் ஹக் மற்றும் மகன் சகீதுல் ஆகியோர், வீட்டில் வாங்கி வைத்திருந்த பழைய பொருட்களை பரிசோதித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில், மற்ற மூவரும் வீட்டில் இல்லை என்றும் தெரிகிறது. அப்போது, திடீரென அங்கிருந்த ஒரு பொருள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. இதனைக் கேட்டதும் அதிர்ந்து போன அக்கம் பக்கத்தினர், உடனடியாக அங்கே சென்று பார்த்த போது பசல் மற்றும் சகீதுல் ஆகியோர், ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இதில், பசல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
தீவிர விசாரணையில் இறங்கிய போலீசார்
தொடர்ந்து, கண்ணூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சகீதுலும் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், பசல் தங்கி இருந்த வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். பசல் மற்றும் சகீதுல் கொண்டு வந்த பழைய பொருட்களில் வெடிகுண்டு இருந்திருக்கலாம் என்றும் அதை அவர்கள் தெரியாமல் எடுத்து பார்த்த போது, வெடித்திருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர்.
அது மட்டுமில்லாமல், ஏதாவது முன் பகை காரணமாக யாராவது வேண்டுமென்றே இப்படி செய்தார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. தொடர்ந்து, இந்த விபத்திற்கான காரணம் குறித்தும், போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read | "21 வருஷத்துக்கு அப்புறமா.." மண்ணில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட முல்லா உமரின் கார்.. வைரலாகும் புகைப்படம்