காதலியை தேடி வந்த இளைஞர்??.. கடைசியாக கடலை பார்த்து ஓடிய சிசிடிவி காட்சி.. கேரளாவை அதிர வைத்த சம்பவம்..
முகப்பு > செய்திகள் > இந்தியாகன்னியாகுமரி மாவட்டம், இரயுமன்துறை கடற்கரை பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன், இளைஞர் ஒருவரின் உடல் கரை ஒதுங்கி இருந்தது.
இது தொடர்பாக, நித்திரவிளை போலீசார் மற்றும் குளச்சல் கடலோர காவல் படையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், கடற்கரையில் ஒதுங்கிய உடல், கேரள மாநிலம், திருவனந்தபுரம் பகுதியை அடுத்த நரூவாமூடு பகுதியை சேர்ந்த மது மகன் கிரண் என்பது தெரிய வந்தது.
இது தொடர்பாக போலீசார் விசாரித்ததில், பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. விழிஞ்சம் பகுதியில் உள்ள ஆழிமலை என்னும் பகுதிக்கு தனது நெருங்கிய தோழியை பார்ப்பதற்காக கிரண் தனது நண்பர்களுடன் சென்றதாகவும் கூறப்படுகிறது. அந்த பெண்ணின் வீட்டிற்கு அருகே கிரண் மற்றும் நண்பர்கள் உலாவிக் கொண்டிருக்க, பெண்ணின் சகோதரன் ஹரி மற்றும் உறவினரான ராஜேஷ் ஆகிய இருவர், எங்களின் குடும்பத்தில் உள்ள பெண்ணிடம் உனக்கு என்ன உறவு உள்ளது என கேட்டு கிரணை அடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் பின்னர், கிரணை தனியாக டூவீலரில் வைத்து அழைத்துச் சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பின்னர், சுமார் நான்கு நாட்கள் கழித்து கிரணின் உடலும் கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை பகுதியில் ஒதுங்கி உள்ளது. கிரண் உடல் கிடைத்த தினத்தில் இருந்தே ராஜேஷ் மற்றும் ஹரி ஆகியோர் தலைமறைவாகி உள்ளனர்.
இது தொடர்பான விசாரணையில், ராஜேஷ் மற்றும் ஹரி ஆகியோரிடம் இருந்து தப்பி கடலை நோக்கி கிரண் ஓடும் சிசிடிவி காட்சிகளும் கிடைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆனால் அவரைப் பின்பற்றி ராஜேஷ் அல்லது ஹரி என யாரும் ஓடவில்லை. மேலும், ராஜேஷ் மற்றும் ஹரியிடம் இருந்து தப்பிப்பதற்காக, கடல் நீர் அருகே கிரண் ஒளிந்து இருக்கலாம் என்றும், அப்போது எதிர்பாராத விதமாக கடலில் சிக்கி அவர் இறந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
கடந்த பல நாட்களாக, கேரளாவை அதிர வைத்த இந்த இளைஞரின் மறைவு தொடர்பாக தலைமறைவாக இருந்த ராஜேஷ் மற்றும் ஹரி ஆகிய இருவரை சமீபத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.
அதே வேளையில் கிரண் தற்கொலை செய்து கொள்ளவில்லை எனக் கூறப்படும் நிலையில், கடல் நீரில் தற்செயலாக விபத்து நேர்ந்திருக்கலாம் என்றும் கருத்தப்படுகிறது. கிரண் கடல் நீரில் இழுத்து செல்லப்பட்டாரா அல்லது அவர்களுக்கு பின்னால் ஹரி மற்றும் ராஜேஷ் என யாராவது உள்ளார்களா என்பதை உறுதி செய்ய, தொடர்ந்து தீவிரமாக போலீசார் விசாரணையை கொண்டு வருகின்றனர்.