"அம்மாடியோவ்.." கின்னஸ் சாதனை படைத்த காளான் மோதிரம்.. "ஒரு மோதிரத்தில் இத்தன ஆயிரம் வைரமா??.." பிரமிப்பில் ஆழ்ந்த மக்கள்
முகப்பு > செய்திகள் > இந்தியாஉலகின் பல இடங்களில், நாளுக்கு நாள் ஏதாவது ஒரு மூலையில், பல்வேறு உலக சாதனைகள் நடந்து மக்கள் மத்தியிலும் கவனம் உருவாக்கப்பட்டு தான் வருகிறது.

அதே போல, கேரளாவைச் சேர்ந்த நகைக்கடை செய்த கின்னஸ் உலக சாதனை ஒன்று, பலரையும் பிரமிப்பில் ஆழ்த்தி உள்ளது.
பொதுவாக, பலருக்கும் செயின், மோதிரம் உள்ளிட்ட அணிகலன்கள் அணிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் இருக்கும்.
கின்னஸ் சாதனை படைத்த வைர மோதிரம்
அந்த வகையில், கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள SWA டைமண்ட்ஸ், உலக அளவில் அசாத்திய சாதனை ஒன்றை படைத்துள்ளது. ஒரு மோதிரம் என்றால், அதில் சில வைரங்களை கொண்டு வடிவமைக்கபட்டதை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், SWA டைமண்ட்ஸ் தற்போது உருவாக்கி உள்ள மோதிரம் ஒன்றில், சுமார் 24,679 வைரங்களை கொண்டு ஒரு மோதிரத்தை உருவாக்கி உள்ளனர்.
அதுவும் இந்த மோதிரம், காளான் போன்ற வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது தான் இதன் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. மேலும், இந்த மோதிரத்திற்கு 'அமி' என்றும் பெயரிடப்பட்டுள்ளது. சம்ஸ்கிருத சொல்லான இந்த வார்த்தை, 'அழியாத தன்மை' மற்றும் 'நீண்ட ஆயுள்' என்பதைக் குறிக்கின்றது.
பிராமிக்க வைக்கும் காளான் மோதிரம்
இதற்கு முன்பு, மீரட் பகுதியைச் சேர்ந்த நகை வியாபாரி ஒருவர், சுமார் 12,638 வைரங்களைக் கொண்டு உருவாக்கி இருந்த மோதிரம் தான் கின்னஸ் சாதனையை படைத்திருந்தது. அதனை SWA டைமண்ட்ஸ் தற்போது முந்தி சாதனை படைத்துள்ளது. தங்களின் நிறுவனத்தின் மீது மக்களின் கவனத்தை திரும்புவதற்கான முயற்சிக்காக இந்த சாதனை மோதிரம் வடிவமைக்கப்பட்டதாகவும், அந்த நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதனை வடிவமைத்து முடிக்க, சுமார் 3 மாதங்கள் வரை அவர்கள் எடுத்துக் கொண்டனர். முதலில் 3டி பிரின்டிங் மூலம் டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்டு, தொடர்ந்து மோதிரத்தின் இதழ்களின் ஒவ்வொரு பக்கத்திலும் கைகளைக் கொண்டே, வைரங்களை தனித்தனியாக வைத்துள்ளதாக வைரக்கடை நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல, கின்னஸ் அதிகாரிகள், மைக்ரோஸ்கோப் மூலம் வைரத்தின் எண்ணிக்கை, எடை, கேரட் உள்ளிட்டவற்றை பரிசோதித்து பார்த்துள்ளனர். இந்த காளான் மோதிரத்தின் வீடியோ ஒன்றையும் கின்னஸ் உலக சாதனையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Also Read | முதல் மனைவிக்கு நேர்ந்த பெரும் சோகம்.! அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் வேதனை பதிவு.. எப்படி நடந்தது.?

மற்ற செய்திகள்
