"பூனைன்னா எங்க உசுருக்கு சமம்".. வியந்து பார்க்க வைத்த தம்பதி.. "அதுக்காக வீட்டையே இப்டி மாத்திட்டாங்களே!!"
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவை சேர்ந்த தம்பதி ஒருவர், பூனை மீது கொண்ட அதீத அன்பு காரணமாக, தங்களின் வீட்டையே வேற லெவலில் மாற்றியுள்ள சம்பவம், நெட்டிசன்கள் பலரையும் நெகிழ வைத்துள்ளது.
அமெரிக்காவின் வின்கான்சின் என்னும் பகுதியை அடுத்த மேனோமோனி ஃபால்ஸ் என்கிற கிராமத்தை சேர்ந்தவர் Shawn Redner. இவரது மனைவியின் பெயர் Hilary Siegel-Redner.
இவர்கள் இருவருக்கும் பூனை மீது அதிக அளவில் அன்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி ஒரு சூழ்நிலையில் தான், தங்களின் வீட்டை பூனை அருங்காட்சியகமாக மாற்றி உள்ளனர்.
இதற்காக, கடந்த 2020 ஆம் ஆண்டு, ஷான் மற்றும் ஹிலாரி ஆகியோர், அவர்களின் வீட்டை பூனை அருங்காட்சியகமாக மாற்றி உள்ளனர். ஆரம்பத்தில், மொத்தம் 4000 பூனை உருவங்களை அவர்கள் வீட்டில் பார்வைக்காக வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பாக, மேலும் 3000 பூனை உருவங்களை தங்கள் வீட்டின் அருங்காட்சியகத்தில் சேர்த்துள்ளனர்.
மேலும், இந்த அருங்காட்சியகத்துக்காக தங்கள் வீட்டின் கீழ்த் தளம் முழுவதையும் சிறப்பாக வடிவமைத்து மாற்றி உள்ளனர். ஷான் - ஹிலாரி தம்பதியினரிடம் 8 உயிருள்ள பூனைகளும் உள்ளது. பூனை அருங்காட்சியகம் தான் தங்களுடைய வாழ்க்கை என ஷான் குறிப்பிடும் நிலையில், இங்குள்ள பூனை உருவங்கள் பலரது வாழ்க்கையின் பிரதிபலிப்பு என்றும் குறிப்பிடுகிறார். இது பற்றி பேசும் அவரது மனைவி ஹிலாரி, பூனைகள் மிகவும் அன்புள்ளவர்கள் என்றும் இனிமை ஆனவர்கள் என்றும் குறிப்பிடுகிறார்.
இந்த அருங்காட்சியகத்தில் உள்ள பூனைகளில் பெரும்பாலானவை பலரால் நன்கொடை அளிக்கப்பட்டதாகும். மேலும் சில பூனை உருவங்கள், செகண்ட் ஹேண்ட் கடைகளில் வாங்கப்பட்டவை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
ஷான் மற்றும் ஹிலாரி ஆகியோர், ஒவ்வொரு மாதமும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையன்று மக்கள் இந்த அருங்காட்சியகத்தை பார்வையிட அனுமதிக்கின்றனர். அதே போல, இந்த இடத்தை ஒரு காஃபி ஷாப்பாக மாற்ற விரும்புவதாகவும் ஷான் குறிப்பிடுகிறார். இங்கே காஃபி குடிக்க வருவபவர்கள், தங்களின் பூனையை கூட கொண்டு வரலாம் என்பதற்காக தான் இந்த ஆலோசனையை முன்னெடுத்து வருகின்றனர்.