GPS பாத்து வேகமா போன கார்.. "வழி இருக்கும்ன்னு திரும்புனா.." கடைசியில் நடந்த விபரீதம்.. ஓடி வந்த ஊர் மக்கள்!!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் ஜிபிஎஸ் உதவியுடன் கார் ஒன்று சென்று கொண்டிருந்த நிலையில், திடீரெனெ அரங்கேறிய சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் சோனியா. மருத்துவரான இவர், தனது குழந்தை, தாய் சூசம்மா மற்றும் உறவினர் அனிஷ் ஆகியோருடன் காரில், எர்ணாகுளம் பகுதியில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்றுள்ளார்.
அப்படி செல்லும் போது, இவர்கள் GPS பயன்படுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. அந்த சமயத்தில், திருவாத்துக்கல் - நாட்டகோம் பைபாஸ் அருகே, கோட்டயத்தின் பறச்சல் என்னும் பகுதியில் வைத்து அசம்பாவிதம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
GPS படி, அவர்கள் வழியை பின்பற்றி சென்ற போது, வழி தவறி அப்பகுதியில் இருந்த சானல் ஒன்றிற்குள் கார் சென்று கவிழ்ந்துள்ளது. இதனை தொடர்ந்து, அந்த பகுதியில் இருந்த நீரில், கார் வேகமாக கீழ்நோக்கி சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால், காரில் இருந்தவர்கள் உடனடியாக கூச்சல் போட தொடங்கவே, அப்பகுதி மக்கள் உடனடியாக உதவுவதற்காக முன் வந்தனர். அவர்கள் கயிறுகளைக் கட்டி, காருக்குள் சிக்கிக் கொண்ட சோனியா மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரையும் பத்திரமாக மீட்டெடுத்தனர்.
இது தொடர்பாக சம்பவத்தை நேரில் பார்த்த சத்யன் என்பவர் தெரிவிக்கையில், நாங்கள் சம்பவ இடம் வந்து சேரும் போது, கார் ஏறக்குறைய வேகமாக நீருக்குள் மூழ்கிக் கொண்டிருந்தது என்றும், கிட்டத்தட்ட முன் பகுதி அனைத்தும் நீருக்குள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். பின்னர், உடனடியாக கயிறு கட்டி காரில் இருந்தவர்களை பத்திரமாக மீட்ட பிறகு, அவர்கள் தங்களின் உறவினர்களை அழைத்து அவர்களுடன் அங்கிருந்து கிளம்பிச் சென்றதாகவும் சத்யன் தெரிவித்துள்ளார்.
GPS பார்த்து, வழி இருப்பதாக சென்ற நிலையில், அங்கு நீர் சூழ்ந்தபடி இருந்த பகுதிக்குள் காருடன் குடும்பத்தினர் சிக்கி பின்னர் பிழைத்துக் கொண்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.