"வீட சுத்தம் பண்ணிட்டு இருந்தப்போ.." திடீர்ன்னு நடந்த அசம்பாவிதம்.. அண்ணன் செஞ்ச அசாத்திய சம்பவம்
முகப்பு > செய்திகள் > இந்தியாஅவ்வப்போது இணையத்தில், ஏதாவது பரபரப்பான அல்லது அதிர்ச்சிகரமான வீடியோக்கள் வெளியாகி, பார்ப்போர் பலரையும் ஒரு நிமிடம் அப்படியே உறைந்து போக வைக்கும்.

அந்த வகையில், தற்போது வீட்டின் வாசல் அருகே நடைபெறும் சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று, இணையத்தில் சற்று பரபரப்பை உண்டு பண்ணி உள்ளது.
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள சங்கரன்குளம் அருகேயுள்ள உதலூர் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் சாதிக். இவரது தம்பி ஷபீக்.
இவர்கள் இரண்டு பேரும் சம்பவத்தன்று, வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. வீட்டின் மொட்டை மாடியில், தம்பி ஷபீக் சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில், அண்ணன் சாதிக் வீட்டின் வாசல் அருகே நின்ற படி, தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்த படி நின்றுள்ளார்.
அப்போது தான், அங்கே எதிர்பாராத சம்பவம் ஒன்று அரங்கேறியது. மாடியில் சுத்தம் செய்து கொண்டிருந்த ஷபீக், திடீரென கால் தவறி கீழே விழுந்துள்ளார். தலை கீழாக அவர் விழவே, கீழே நின்று கொண்டிருந்த அண்ணன் சாதிக், இதனைக் கண்டு அதிர்ந்து போகவே, ஒரு சில வினாடிகளில் கையில் வைத்திருந்த தண்ணீர் பைப்பை வீசி விட்டு, தம்பியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அவரை பிடிக்கவும் தயாராகி உள்ளார்.
தொடர்ந்து, தலை கீழாக விழுந்த தம்பியை பத்திரமாக மார்போடு பிடித்த சாதிக், தம்பியை அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைக்கவும் செய்தார். இந்த சம்பவத்தினால், சாதிக் மற்றும் ஷபீக் ஆகிய இருவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது. தொடர்ந்து, இதன் காரணமாக, சாதிக் சில வினாடிகள் உறைந்து இருக்கவே, பின்னர் இருவரும் எழுந்து செல்கின்றனர்.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வரும் நிலையில், சகோதரர் கீழே இல்லை என்றால், என்ன ஆகி இருக்கும் என்பது பற்றியும் குறிப்பிட்டு வருகின்றனர்.
Also Read | "நான் ஒரு தன்பாலின ஈர்ப்பாளர் தான்.." வெளிப்படையாக சொன்ன முன்னாள் கிரிக்கெட் வீரர்..

மற்ற செய்திகள்
