பக்கத்து வீட்டு நாயால்.. கல்லூரி மாணவிக்கு நேர்ந்த துயரம்.. சோகத்தில் மூழ்கிய ஊர் மக்கள்
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு, பக்கத்து வீட்டு நாய் காரணமாக நடந்த சம்பவம், அவரது குடும்பத்தினர் அனைவரையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

கேரள மாநிலம், பாலக்காடு பகுதியை அடுத்த மாங்கர என்னும் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீலட்சுமி. 19 வயதாகும் இவர், கோயம்பத்தூர் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில், BCA முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
இதனிடையே, கடந்த சில வாரங்களுக்கு முன், தனது வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த போது, பக்கத்து வீட்டில் உள்ள நாய் ஒன்று, ஸ்ரீலக்ஷ்மியை கடித்துள்ளது.
திடீரென தோன்றிய அறிகுறி?
தொடர்ந்து, அவரது பெற்றோர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் ஸ்ரீலக்ஷ்மியை அனுமதித்த நிலையில், அங்கு அவருக்கு நாய் கடிக்கான அனைத்து விதமான தடுப்பூசிகளும் போடப்பட்டதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில், அவருக்கு எந்த விதமான நோய் தொற்று அறிகுறிகளும் காட்டப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆனால், சில தினங்களுக்கு பிறகு, Rabies நோய் தொற்றுக்கான அறிகுறிகள், ஸ்ரீலக்ஷ்மிக்கு தோன்றியதாக சொல்லப்படுகிறது.
கடைசியில் நேர்ந்த சோகம்..
தொடர்ந்து, மீண்டும் அவரை தனியார் மருத்துவமனை ஒன்றில் அழைத்து சென்ற நிலையில், நோய் தொற்று தீவிரமானதால் அதன் பின்னர் திருச்சூர் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அப்போது அவருக்கு அதிக காய்ச்சல் இருந்துள்ளது. மேலும், Rabies நோய்க்கான சிகிச்சையும் வழங்கப்பட்டு வந்துள்ளது. ஆனால், நாய் கடிக்கப்பட்டு சுமார் ஒரு மாதங்கள் ஆன நிலையில், சிகிச்சை பலனின்றி மாணவி ஸ்ரீலட்சுமி தற்போது உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்கள் அனைவரையும் கடும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
முன்னதாக, மாணவி ஸ்ரீலக்ஷ்மியை அந்த நாய் கடிப்பதற்கு ஒரு நாள் முன்பாக, அந்த நாயின் வீட்டு உரிமையாளரையும் கடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அவரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

மற்ற செய்திகள்
