"கோலி CAPTAINCY'ல நான் மட்டும் ஆடி இருக்கணும், இப்போ கதையே வேற.." இந்திய அணி குறித்து ஸ்ரீசாந்த் சொன்ன கருத்து..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith Kumar V | Jul 21, 2022 11:36 AM

இந்திய அணியின் சிறந்த கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி, கடந்த ஆண்டு நடைபெற்ற டி 20 உலக கோப்பையுடன், டி 20 கேப்டன் பதவியில் இருந்து  விலகிக் கொண்டார்.

Sreesanth say india would win more world cups if he played under kohli

Also Read | குளிர் தேசத்தில் வரலாறு காணாத வெயில்.. சாலையில் உருகி ஓடும் தார்.. சமாளிக்க முடியாமல் திணறும் மக்கள்.. வைரல் புகைப்படங்கள்..!

தொடர்ந்து, ஒரு நாள் கேப்டன் பதவியில்  இருந்து விலகிய விராட் கோலி, தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பிறகு, டெஸ்ட் கேப்டன் பதிவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார்.

விராட் கோலி தலைமையில், டெஸ்ட் போட்டிகளில் நம்பர் 1 அணியாக விளங்கி பல்வேறு சாதனைகளையும் புடைத்திருந்தது. அவர் விலகிக் கொண்டதால், மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணியை ரோஹித் ஷர்மா தலைமை தாங்கி வருகிறார்.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான ஸ்ரீசாந்த், கோலி தலைமையில் தான் ஆடி இருந்தால் என்ன நடந்திருக்கும் என்பது பற்றி தற்போது கருத்து தெரிவித்துள்ளார். கேரளாவில் இருந்து வந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், 2007 ஆம் ஆண்டு இந்திய அணி டி 20 கோப்பையைக் கைப்பற்றிய போதும், 2011 ஆம் ஆண்டு, ஐம்பது ஓவர் உலக கோப்பையைக் கைப்பற்றிய போதும், இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார்.

Sreesanth says india would win more world cups if he played under kohl

அதிலும், டி 20 உலக கோப்பையின் இறுதி போட்டியில், ஸ்ரீசாந்த் கேட்ச் எடுத்து, கோப்பையைக் கைப்பற்ற உதவியதை யாரும் மறந்து விட மாட்டார்கள். தொடர்ந்து, ஐபிஎல் கிரிக்கெட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஸ்ரீசந்திற்கு கிரிக்கெட் விளையாட 7 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர், தடை முடிந்து உள்ளூர் போட்டிகளில் ஆடி வந்தார். பின்னர், கடந்த மார்ச் மாதம் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வினையும் ஸ்ரீசாந்த் அறிவித்து விட்டார்.

இதனிடையே, விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் தான் இடம்பெற்று ஆடி இருந்தால், 2019, 2021 உள்ளிட்ட ஆண்டுகளில் நடந்த உலக கோப்பையை இந்திய அணி கைப்பற்றி இருக்கும் என ஸ்ரீசாந்த் கூறி உள்ளார்.

Sreesanth says india would win more world cups if he played under kohl

தொடர்ந்து, யார்க்கர் பந்துகள் குறித்து பேசிய ஸ்ரீசாந்த், "விளையாடும் போது சில ட்ரிக்குகளை நாம் பின்பற்றுவது நல்லது. யார்க்கர் பந்துகளை எப்படி வீச வேண்டும் என்பது பற்றி டென்னிஸ் பந்துகள் மூலம் எனது பயிற்சியாளர் எனக்கு சொல்லி கொடுத்தார். பும்ராவிடம் கேட்டால், அது மிக எளிதான காரியம் என அவர் சொல்வார்" என ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.

கோலி தலைமையில் தான் ஆடி இருந்தால், இந்திய அணி உலக கோப்பையை வென்றிருக்கும் என்ற ஸ்ரீசாணத்தின் கருத்து பற்றி, ரசிகர்களும் பல விதமான கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Also Read | 11 வருஷமா கஷ்டப்பட்டு தனியாளா உருவாக்கிய கார்.. "யாருமே உதவி பண்ணலன்னு ஃபீல் பண்ணப்போ".. ஆனந்த் மஹிந்திரா கொடுத்த செம ஆஃபர்

Tags : #CRICKET #VIRATKOHLI #SREESANTH #INDIAN TEAM #WORLD CUPS #ஸ்ரீசாந்த் #விராட் கோலி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Sreesanth say india would win more world cups if he played under kohli | Sports News.