க்ளோனிங் ஆராய்ச்சியில் சரித்திரம் படைத்த ஆராய்ச்சியாளர்கள்.. அவங்க தேர்ந்தெடுத்த விலங்கு தான் ஹைலைட்டான விஷயம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் முதன்முறையாக ஆர்க்டிக் ஓநாயை க்ளோனிங் மூலமாக உருவாக்கி சாதனை படைத்திருக்கின்றனர். இது உலக அளவில் மிக முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
Also Read | 52 வருசத்துல.. லாட்டரிக்கு செலவு செஞ்சது மட்டும் 3.5 கோடி ரூபா.. "ஆனா கெடச்ச பரிசு எவ்ளோ தெரியுமா?"
க்ளோனிங் என்பது ஒரு உயிரினத்தை போலவே மற்றொரு உயிரினத்தை படைப்பது. முதன் முறையாக 1996 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்த்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் செம்மறி ஆட்டை இந்த முறையில் உருவாக்கினர். டாலி எனப் பெயரிடப்பட்ட இந்த ஆடு அறிவியல் வட்டாரத்தில் அப்போது பெரும் பிரபலமானது. இந்நிலையில், சீனாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆர்டிக் பகுதியில் வசிக்கும் ஓநாயை க்ளோனிங் முறையில் உருவாக்கியுள்ளனர். பிறந்து 100 நாட்கள் ஆன இந்த ஓநாய் நலமுடன் இருப்பதாகவும், இதேபோல, அடுத்த ஓநாயை உருவாக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
ஆர்டிக் ஓநாய்
ஆர்க்டிக் ஓநாய், வெள்ளை ஓநாய் அல்லது துருவ ஓநாய் என்றும் அழைக்கப்படுகிறது. இது கனடாவின் வடக்கு ஆர்க்டிக் தீவுக்கூட்டத்தில் உள்ள உயர் ஆர்க்டிக் டன்ட்ராவைச் சேர்ந்த சாம்பல் ஓநாயின் கிளையினமாகும். உலக வனவிலங்கு நிதியத்தின்படி, இந்த வகை ஓநாய்கள் உணவு மற்றும் காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சீனாவின் பெய்ஜிங்கை தளமாகக் கொண்ட நிறுவனமான சினோஜீன் பயோடெக்னாலஜி அழிந்துவரும் உயிரினங்களை க்ளோனிங் மூலமாக உருவாகும் பணியில் இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஆர்க்டிக் ஓநாயை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு அதில் வெற்றியும் கண்டிருக்கிறது இந்த நிறுவனம்.
மாயா
க்ளோனிங் மூலம் உருவாக்கப்பட்ட இந்த ஓநாய்க்கு மாயா என பெயரிடப்பட்டுள்ளது. ஆர்க்டிக் பெண் ஓநாயில் இருந்து, மாதிரிகள் எடுக்கப்பட்டு அவர் பீகிள் எனப்படும் நாய் வகையின் கருமுட்டையில் வளர்க்கப்பட்டிருக்கின்றன. இந்த வகை நாய்கள், பழங்கால ஓநாய்களின் மரபணுவில் இருந்து வந்ததால், இந்த முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் இறங்கியுள்ளனர். மொத்தம். 85 கரு உருவாக்கப்பட்டு அவை 7 நாய்களின் கருமுட்டையில் வளர்க்கப்பட்டிருக்கின்றன. இறுதியில் ஒரு ஆரோக்கியமான ஆர்க்டிக் ஓநாய் பிறந்திருப்பதாக அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது.
இதுகுறித்து பேசிய நிறுவனத்தின் பொது மேலாளர் மி ஜிடாங்,"இரண்டு வருட கடினமான முயற்சிகளுக்குப் பிறகு, ஆர்க்டிக் ஓநாய் வெற்றிகரமாக குளோனிங் செய்யப்பட்டது. உலகிலேயே இதுபோன்ற முதல் முயற்சி இதுதான்" என்றார். உலகில் அழிந்துவரும் உயிரினங்கள் க்ளோனிங் மூலமாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர்கள் ஆர்க்டிக் ஓநாயை வெற்றிகரமாக உருவாக்கியிருப்பது, உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Also Read | 30 வருஷ காத்திருப்பு.. சர்ப்ரைஸ் கொடுத்த வெப் தொலைநோக்கி.. சந்தோஷத்தில் ஆராய்ச்சியாளர்கள்..!