பெரும் சோகம்.! பிரபல இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர் & தொழிலதிபர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மரணம்.!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By K Sivasankar | Aug 14, 2022 11:43 AM

பிரபல தொழிலதிபரும், பங்குசந்தை முதலீட்டாளருமான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 62.

Share Market Investor Rakesh Jhunjhunwala Dies ராகேஷ் ஜுன்ஜுன்வாலா

Also Read | "பைக்குள்ள என்ன நெளியுற மாதிரி இருக்கு".. பயணி மீது வந்த சந்தேகம்.. யம்மாடி இவ்வளவையுமா Bag-ல எடுத்துட்டு வந்தாரு?

மும்பையில் இருக்கும் கேண்டி பிரீச் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் ராக்கேஷ் ஜுன்ஜுன்வாலா இன்று காலை 6.45 மணிக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டார். ஆனால், அவர் உயிரிழந்துவிட்டதாக, அவரை பரிசோதித்த  மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சுமார் 5.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு கொண்டவர் ராகேஷ் ஜுன் ஜுன்வாலா  என அண்மையில் பிரபலங்களில் சொத்து மதிப்புகளை வரிசைப்படுத்தும் நாளிதழான போர்ப்ஸ் நாளிதழ் தெரிவிதிருந்தது.

Share Market Investor Rakesh Jhunjhunwala Dies ராகேஷ் ஜுன்ஜுன்வாலா

இதேபோல், ஆகாசா எனும் புதிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தை அண்மையில், ராகேஷ் ஜுன் ஜுன்வாலா தொடங்கியிருந்தார். இந்த ஆகாசா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தொடக்க விழாவில் ராகேஷ் ஜுன் ஜுன் வாலா வந்திருந்ததை அனைவராலும் காண முடிந்தது.

Share Market Investor Rakesh Jhunjhunwala Dies ராகேஷ் ஜுன்ஜுன்வாலா

இந்நிலையில் தற்போது மரணம் அடைந்துள்ள தொழிலதிபர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் குடும்பத்தினருக்கு அரசியல் பிரபலங்கள், தொழில்துறை நிபுணர்கள், சக பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Also Read | கிரிக்கெட் வீரர் ராஸ் டெய்லரை அடித்த பிரபல ஐபிஎல் அணியின் உரிமையாளர்? குற்றம் சாட்டிய டெய்லர்! பரபரப்பு தகவல்

Tags : #SHARE MARKET #SHARE MARKET INVESTOR #RAKESH JHUNJHUNWALA #RAKESH JHUNJHUNWALA DIES #இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர் #ராகேஷ் ஜுன்ஜுன்வாலா

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Share Market Investor Rakesh Jhunjhunwala Dies ராகேஷ் ஜுன்ஜுன்வாலா | India News.