BANK-ல நகை அடகு வெச்ச பணம்.. SAFE-ஆ இருக்கும்னு ஸ்கூட்டில வெச்ச பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி.!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வங்கியில் நகை அடமானம் வைத்து விட்டு, அந்த பணத்தை பாதுகாப்பாக இருக்கும் என்று தன்னுடைய ஸ்கூட்டி டிக்கியில் பெண் ஒருவர் வைத்துள்ளார். அதன்பிறகு அந்த பணம் காணாமல் போயிருக்கும் சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
கடலூர் மாவட்டம் ராமநத்தத்தை அடுத்து இருக்கும் தொழுதூர் பகுதியைச் சேர்ந்தவர் ராயப்பன். இவருடைய மனைவி கீதா. இவர்கள் அப்பகுதியில் இருக்கும் இந்தியன் வங்கிக்கு மாலை நேரம் ஒன்றில் சென்று இருக்கின்றனர். அப்போது விவசாய பணிக்காக தன்னுடைய 7 பவுன் தாலி செயினை கீதா அடகு வைத்திருக்கிறார். இதற்கென 80 ஆயிரம் ரூபாய் பணத்தை வங்கியில் இருந்து பெற்று இருக்கிறார்.
பின்னர் தம்முடைய மொபெட் ஸ்கூட்டியின் டிக்கியில் அந்த பணத்தை பாதுகாப்பாக இருக்கட்டும் என்று வைத்திருக்கிறார். பின்னர் அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் புறப்பட்ட இவர்கள் கடைவீதியில் வண்டியை நிறுத்திவிட்டு அருகில் இருக்கும் பேக்கரிக்கு சென்று பொருட்களை வாங்கிவிட்டு மீண்டும் வீடு திரும்பும் யோசனையில் சென்று இருக்கின்றனர். ஆனால் பொருட்களை எல்லாம் வாங்கிவிட்டு திரும்பவும் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு வீட்டுக்கே வந்துள்ளனர்.
வீட்டுக்கு வந்து பார்த்தபோதுதான் வண்டியில் வைத்த பணத்தை எடுப்பதற்காக வண்டியின் டிக்கியை கீதா திறந்து பார்த்திருக்கிறார். அப்போது தான் டிக்கியில் பணம் இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். பின்னர் இது குறித்து ராமநத்தம் காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கின்றனர். இந்த புகாரை ஏற்றுக் கொண்ட போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்ததுடன் சாலை ஓரமிருக்கும் சிசிடிவி கேமராக்களின் மூலம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இப்படி இருசக்கர வாகனத்தில் வைத்த பணத்தை திருடி இருக்கும் இந்த சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இருசக்கர வாகனத்தின் டிக்கியில் பண்ம வைப்பதை பாதுகாப்பாக கருதுபவர்கள் பலருக்கும் இந்த சம்பவம் ஒரு அதிர்ச்சி அனுபவமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.