ரூ.1.3 கோடி ஸ்காலர்ஷிப்பில் படிப்பு .. UNESCO தலைவர்களுக்கே ஆலோசனை சொல்ல போகும் இந்திய மாணவன்.. !
முகப்பு > செய்திகள் > இந்தியாஹைதராபாத்தை சேர்ந்த மாணவர் ஒருவருக்கு ரூ.1.3 கோடி ஸ்காலர்ஷிப்பில் அமெரிக்காவில் படிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இது பலரையும் திகைப்படைய செய்திருக்கிறது.
ஸ்காலர்ஷிப்
பொதுவாகமே இந்திய மாணவர்களிடையே வெளிநாடுகளில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் சமீப காலங்களில் அதிகரித்திருக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிகளிலேயே மேற்கொள்கின்றனர். திறமையை நிரூபிக்கும் மாணவர்களுக்கு ஊக்க தொகையுடன் கல்லூரிகளும் அட்மிஷன் வழங்கவும் தயாராக இருக்கின்றன. அந்த வகையில் ஹைதராபாத்தை சேர்ந்த மாணவர் ஒருவருக்கு மிகப்பெரிய வாய்ப்பை வழங்கியுள்ளது அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்று.
ஹைதராபாத்தை சேர்ந்தவர் வேதாந்த் ஆனந்த்வாடே. 18 வயதான இவர் அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் யூனிவெர்சிட்டியில் (Case Western Reserve University) படிக்க இருக்கிறார். இவருக்கு 1.3 கோடி ரூபாய் ஸ்காலர்ஷிப் வழங்கவும் இந்த பல்கலைக்கழகம் ஒப்புக்கொண்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் இந்த கல்லூரியில் பயின்ற 17 பேர் இதுவரையில் புகழ்பெற்ற நோபல் பரிசை வென்றிருக்கிறார்கள். இந்நிலையில் அவர்களுடன் ஆனந்த் ஆராய்ச்சியில் ஈடுபட இருக்கிறார்.
காலநிலை மாற்றம்
உலக அளவில் மிகப்பெரும் அச்சுறுத்தலாக விளங்கிவரும் காலநிலை மாற்றம் குறித்து பல்வேறு பல்கலைக்கழகங்கள் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், கால நிலை மாற்றத்தை தடுக்க UNESCO அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்க இருக்கிறார் ஆனந்த். இதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகள் ஏராளம். பத்தாம் வகுப்பு முடித்த உடனேயே ஆனந்தின் தயார் அவருக்கு Dexterity Global பற்றி அறிமுகம் செய்திருக்கிறார். இதன்மூலம், காலநிலை மாற்றம் குறித்த ஆய்வுகளில் அவர் ஈடுபட்டு வந்திருக்கிறார்.
அதன் அடிப்படையில் ஒவ்வொரு வாரமும் பல்வேறு தேர்வுகளை அவர் எதிர்கொண்டிருக்கிறார். இதனை கண்காணித்த பல்கலைக்கழகம் இந்த வாய்ப்பை அவருக்கு வழங்கியிருக்கிறது. இதுகுறித்து அவர் பேசுகையில்,"வெளிநாட்டுக்கு சென்று படிக்க வேண்டும் என்ற ஆர்வம் நான் 8 ஆம் வகுப்பு படிக்கும்போதே ஏற்பட்டது. உயிரியல் துறையில் நான் சாதிக்க வேண்டும் என நினைத்தேன். அதன் பலனாகவே இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது" என்கிறார் மகிழ்ச்சியாக.
கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் யூனிவெர்சிட்டியில் ஆனந்த் நியூரோசயன்ஸ் படிக்க இருக்கிறார். எதிர்காலத்தில் அறுவை சிகிச்சை நிபுணராக வேண்டும் என்பதே தனது கனவு என்கிறார் ஆனந்த். இந்நிலையில் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read | Bank-ல நகை அடகு வெச்ச பணம்.. Safe-ஆ இருக்கும்னு ஸ்கூட்டில வெச்ச பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி.!