'இது எப்படி பாசிபிள்?'... 'கொரோனாவிலிருந்து குணமடைந்த பெண்ணுக்கு'... 'டெஸ்ட் ரிப்போர்ட்டில் காத்திருந்த பெரிய ஷாக்!'...
முகப்பு > செய்திகள் > இந்தியாபெங்களுரூவில் பிளாஸ்மா தானம் செய்ய சென்ற பெண்ணுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் அதிர்ச்சி ரிப்போர்ட் ஒன்று கிடைத்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை நல்ல பலனை அளிப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்த பலரும் தாமாக முன்வந்து பிளாஸ்மா தானம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா அறிகுறிகள் காணப்பட்டதால் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்டுள்ளார். அப்போது அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் 14 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். பின்னர் அவர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்ததாக கூறி, பிளாஸ்மா தானம் செய்வதற்கான தகுதி சான்றிதழும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து பிளாஸ்மா தானம் செய்வதற்காக அவர் மருத்துவமனைக்கு சென்றபோது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவே இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. அதையறிந்து பெரும் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சுகாதாரத்துறையும் உத்தரவிட்டுள்ளது. மருத்துவமனை தரவுகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தவறு ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் கூறியுள்ள நிலையில், இதுதொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
