“கொரோனா பரவுர நேரத்துல.. இத சொன்னதுக்கு எச்சில் துப்புவாங்களா?”.. வைரலான பெண் செய்த காரியம்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான மருந்தினை தயாரிக்கும் பணி தற்போதுதான் ஆங்காங்கே தொடங்கப்பட்டுக் கொண்டு வருகிறது.
இந்த நிலையில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு முறைகளையே உலகம் முழுவதும் உள்ள நாடுகள் நம்பி பின்பற்றி வருகின்றன. அதன் முக்கிய அம்சங்களாக உள்ளவைதான் தனிமனித இடைவெளியும், முகத்தில் மாஸ்க் கட்டுதலுமாக இருக்கின்றன.
பலரும் இதன் அவசியத்தை உணர்ந்து, தானும் கொரோனாவை பெற்றுக்கொள்ளாமலும், பிறருக்கு நம்மிடன் இருந்து பரவிவிடக்கூடாது என்கிற விழிப்புடன் இருந்து வரும் நிலையில், முகக்கவசம் அணியுமாறு கூறிய கடை ஊழியரின் முன் எச்சில் துப்பி அவமதித்துள்ள பெண்ணின் செயல் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் சேவையை செய்யும் ஊழியர் ஒருவர், பெண் ஒருவரிடம், முகக்கவசம் அணியுமாறு வலியுறுத்தியுள்ளார். ஆனால் அதை பொருட்படுத்தாத அப்பெண், எச்சில் துப்பிய சம்பவம் வீடியோவாக வலம் வருகிறது.