காபி, டீயெல்லாம் 'வேணாம்' இது மட்டும் போதும்... கொரோனாவால் உருவான 'மிகப்பெரிய' மாற்றம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்காலையில் எழுந்ததும் பல் துலக்காமல் காபி, டீ குடிக்கும் காலம் எல்லாம் மலையேறி விட்டது. கொரோனாவால் மக்கள் கபசுர குடிநீர், சூப், மூலிகை சாறு ஆகியவற்றுக்கு வேகமாக மாறி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சளி, காய்ச்சல் என்பதெல்லாம் கொரோனா அறிகுறிகள் என்பதால் சளி, காய்ச்சலை தடுக்கும் பொருட்டு இஞ்சி அதிகம் சேர்த்த டீ உண்ணும் உணவில் இஞ்சி, சுக்கு, மிளகு, பூண்டு, மஞ்சள் தூள் போன்றவற்றை அதிகமாகவே சேர்த்து கொள்கிறார்கள். இதேபோல ஆரஞ்சு, எலுமிச்சை, கிவி, கொய்யா, லிச்சி, குடைமிளகாய், பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி, நெல்லிக்காய், திராட்சை, மாம்பழம் காய்கறிகளில் பிராக்கோலி, முட்டைகோஸ், காலிபிளவர் போன்ற வைட்டமின்-சி நிறைந்த காய்கறி-பழங்களை அதிகம் வாங்கி சாப்பிட ஆரம்பித்து இருக்கின்றனர்.
ஆடாதொடை, வேப்பிலை சாறு, முருங்கைச்சாறு அடங்கிய மூலிகை கசாயமும் உணவுக்கு முன்பாக சாப்பிடுகின்றனராம். அதிலும் நொறுக்கு தீனிகளுக்கு தற்காலிக ஓய்வு கொடுக்கும் அளவுக்கு மக்கள் மனதில் மாற்றத்தை கொரோனா உண்டு பண்ணியுள்ளது என்று சொன்னால் அது மிகையல்ல. அந்தளவு கொரோனா பயம் உணவுப்பழக்கம், வாழ்க்கை முறைகளில் பல்வேறு இயற்கை வழிகளை நாட வைத்து விட்டது.