சாத்தான்குளம் நள்ளிரவு கைதில் 'திடீர் திருப்பம்'!: அப்ரூவராக மாறும் காவலர்கள்! என்ன நடந்தது? - சிபிசிஐடி தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தந்தை மகன் கொலை வழக்கில் சிபிசிஐடி விசாரணையில் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டு உள்ளன. சிபிசிஐடி தரப்பு சாட்சிகளாக சிறப்பு எஸ்.ஐ. பால்துரை மற்றும் காவலர் முத்துராஜ் மாறியுள்ளனர்.

சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது தொடர்பாக கோவில்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இது தொடர்பாக மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவின் படி சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய 2 பேர் மீதும் தவறான வழக்குப்பதிவு செய்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் மற்றும் தந்தை-மகனை போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸ்காரர்கள் முருகன், முத்துராஜ், மகாராஜா உள்ளிட்ட 6 பேர் மீதும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்திய தண்டனை சட்டம் 302-வது பிரிவின்படி கொலை வழக்குப்பதிவு செய்தனர். இதில் அனைவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
போலீசார் கைது, விசாரணை காரணமாக சிபிசிஐடி அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இந்த வழக்கில் ஏற்கனவே தலைமை காவலர் ரேவதி அப்ரூவராக மாறிய நிலையில் சிபிசிஐடி விசாரணையில் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டு உள்ளது. சிபிசிஐடி தரப்பு சாட்சிகளாக சிறப்பு எஸ்.ஐ. பால்துரை மற்றும் காவலர் முத்துராஜ் மாறியுள்ளனர்.

மற்ற செய்திகள்
