"லூடோ கேம்ல லவ்".. பாகிஸ்தான் பெண்ணை காதலிச்சு.. நேபாளத்தில் கல்யாணம் பண்ணி.. கர்நாடகாவில் குடியேறினாரா இந்திய இளைஞர்?
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் முலாயம் சிங் (வயது 25). இவர் கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

Images are subject to © copyright to their respective owners
இதனிடையே முலாயம் சிங்கிற்கு செல்போனில் லூடோ கேம் விளையாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டு அதிக நேரம் இயங்கி வந்ததாகவும் தெரிகிறது. அப்படி ஆன்லைன் மூலம் அவர் லூடோ ஆடும் போது பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் முலாயம் சிங்கிற்கு பழக்கம் ஏற்பட்டிருந்ததாக தெரிகிறது.
இதன் காரணமாக, ஆன்லைனில் அடிக்கடி அந்த பாகிஸ்தான் இளம்பெண்ணுடன் சேர்ந்து போனில் கேம் ஆடி வந்த முலாயம், நட்பாக பழகி பின்னர் அவருடன் காதலில் விழுந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது.
இதனையடுத்து, இவர்கள் இருவரும் திருமணம் செய்யவும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. மேலும் இதற்காக பாகிஸ்தானில் இருந்து இளம் பெண்ணும், இந்தியாவில் இருந்து முலாயம் சிங்கும் கடந்த ஆண்டு நேபாள நாட்டிற்கு சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. பின்னர் நேபாளத்தில் வைத்து அவர்கள் திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்படும் நிலையில், நேபாளத்தில் இருந்து பீகார் எல்லை வழியாக இந்தியாவுக்குள் அந்த பெண்ணை முலாயம் சிங் அழைத்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதற்கடுத்து பெங்களூருவில் தான் காவலாளியாக வேலை பார்த்து வரும் பகுதியில் வாடகை வீடு எடுத்து மனைவியுடன் குடியேறி உள்ளார் முலாயம் சிங். இந்த நிலையில் தான் பாகிஸ்தானில் இருந்து இளம் பெண் ஒருவர் இந்தியாவில் சட்டவிரோதமாக நுழைந்து தங்குவது பற்றி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட அவர்கள் உடனடியாக அந்த இளம் பெண்ணை அழைத்து சென்று விசாரணையும் மேற்கொண்டுள்ளனர்.
சமீபத்தில், பாகிஸ்தானில் உள்ள தனது குடும்பத்தினருடன் அந்த இளம் பெண் தொடர்பு கொள்ள முயற்சி செய்த சமயத்தில் தான், இந்திய உளவுத்துறையினர் அதனைக் கண்காணித்து கர்நாடகா உளவுத்துறைக்கும் எச்சரிக்கை கொடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார், முலாயம் சிங்குடன் தங்கி இருந்த பாகிஸ்தான் இளம்பண்ணை அழைத்து வந்து அவரிடம் விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
