கல்யாணமாகி 11 வருசமா ஏம்மா புருஷன் வீட்டுக்கு போகல..? மனைவி சொன்ன ‘ஒரு’ காரணம்.. உடனே ‘விவாகரத்து’ கொடுத்த நீதிமன்றம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Jan 06, 2022 03:54 PM

11 ஆண்டுகளாக கணவனை பிரிந்திருந்த மனைவி அதற்காக கூறிய காரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

High court grants divorce to couple for this reason

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு கடந்த 2010-ம் ஆண்டு பெண் ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. ஆனால் இவர்கள் இருவரும் கணவன் மனைவியாக 11 நாட்கள் மட்டுமே ஒன்றாக வாழ்ந்துள்ளனர். அதன்பிறகு ஒரு முக்கிய வேலை விஷயமாக மனைவியை அவரது பிறந்த வீட்டுக்கு கணவர் அழைத்துச் சென்றுள்ளார். இதனை அடுத்து அப்பெண் கணவர் வீட்டிற்கு திரும்பவில்லை.

High court grants divorce to couple for this reason

இரண்டு முறை மனைவியை அழைக்க அவரது வீட்டுக்கு கணவர் சென்றுள்ளார். ஆனால் பல காரணங்களை கூறி அவர் தட்டிக்கழித்து வந்துள்ளார். இதனை அடுத்து மனைவி தானாக வீட்டுக்கு வந்துவிடுவார் என நம்பி கணவன் இருந்துள்ளார். ஆனால் 11 ஆண்டுகள் ஆகியும் மனைவி கணவனின் வீட்டுக்கு வரவில்லை.

High court grants divorce to couple for this reason

இதனை அடுத்து திருமண உரிமைகளை மீட்டெடுப்பதற்கான விண்ணப்பம் மூலம் குடும்ப நல நீதிமன்றத்தில் கணவர் மனுதாக்கல் செய்துள்ளார். ஆனால் அரசு பணிகளை காரணம் காட்டி அவரது மனைவி தொடர்ந்து ஆஜராகாமல் தவிர்த்து வந்துள்ளார். இதனை அடுத்து நீதிமன்றத்தில் கணவர் இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளார்.

High court grants divorce to couple for this reason

அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கணவருடன் இத்தனை ஆண்டுகளாக ஏன் செல்லவில்லை என மனைவியிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், நல்ல நேரம் வராததால் கணவர் வீட்டுக்கு சென்று குடும்ப வாழ்க்கையை தொடங்க காலதாமதம் ஆகிவிட்டது எனக் கூறியுள்ளார்.

High court grants divorce to couple for this reason

இதைக்கேட்ட நீதிபதிகள், நல்ல நேரம் என்பது மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைகாகத்தான். ஆனால் இங்கே மனைவியோ நல்ல நேரத்தை காரணம் காட்டி 11 ஆண்டுகள் கணவன் வீட்டுக்கு செல்லாமல் இருந்துள்ளார். கொடுக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் மனைவி கணவருடன் செல்ல விருப்பம் இல்லாமல் இருந்துள்ளார் என்பது தெரியவருகிறது. கணவரும் தனது குடும்ப வாழ்க்கையை மீட்டெடுக்க பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். ஆனால் அதற்கு மனைவி ஒத்துழைப்பு கொடுக்கவில்லை அதனால் கணவரின் மனுவை ஏற்று இருவருக்கும் விவாகரத்து வழங்கப்படுகிறது என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

Tags : #HUSBANDANDWIFE #DIVORCE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. High court grants divorce to couple for this reason | India News.