'4,000 ஊழியர்கள்' தலையில் 'குண்டைத்' தூக்கி போட்ட 'பிரபல' நிறுவனம்...! இனி நாங்க என்ன பண்ணுவோம்...? - கதறும் ஊழியர்கள்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஃபோர்டு வாகன தயாரிப்பு நிறுவனம் எடுத்துள்ள அதிரடி முடிவினால் அங்கு பணிபுரியும் நான்காயிரம் ஊழியர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, இந்தியாவில் நீண்ட நாட்களாக வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது.
சென்னையில் மறைமலை நகர் மற்றும் குஜராத்தின் சனந்த் பகுதிகளில் அந்நிறுவனத்தின் வாகனங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் வருடத்திற்கு நான்கு லட்சம் கார்கள் உற்பத்தி செய்ய முடியும் என்ற நிலையில், தற்போது 80,000 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் ஃபோர்டு நிறுவனம் தொடர்ந்து பெரும் நஷ்டத்தில் இயங்கி வந்தது.
கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் அந்நிறுவனத்திற்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்தியாவில் உள்ள இரு ஆலைகளையும் மூட ஃபோர்டு நிறுவனம் முடிவெடுத்துள்ளது. ஏற்கனவே ஸ்பெயின், இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளில் உள்ள ஃபோர்டு நிறுவனத்தின் ஆலைகள் நஷ்டத்தினால் மூடப்பட்டன.
தற்போது இந்தியாவிலும் ஆலைகளை மூடுவதால் நான்காயிரம் பேரின் வேலை கேள்விக்குறியாகி உள்ளது. இது குறித்து ஃபோர்டு சென்னை மறைமலைநகர் தொழிற்சாலையில் உள்ள சில நிர்வாகிகள் கூறும்போது, 2022-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் மூடப்படலாம் என்றும், ஆனால் தொழிலாளர்கள் வேலை பறிபோகாத வண்ணம் மாற்று ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மறைமலைநகர் ஃபோர்டு நிறுவனத்தில் மட்டும் சுமார் 2,000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இந்த அறிவிப்பினால் அவர்கள் தங்கள் வேலை குறித்து கலக்கமடைந்துள்ளனர். இனி இறக்குமதி செய்யப்பட்ட ஃபோர்டு வாகனங்களின் விற்பனை மட்டும் இந்தியாவில் தொடரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்
