நான் 'கேமரா' தாங்க 'ஆர்டர்' பண்ணினேன்...! பார்சல்ல 'என்ன' வந்துருக்குனு நீங்களே கொஞ்சம் பாருங்க...! 'இத' வச்சு நான் என்னங்க பண்றது...? - 'டமாக்கா ஆஃபர்' வைத்த ஆப்பு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை, திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகர் பகுதியில் வசித்து வருபவர் வினோத். இவர் ஃபிளிப்கார்ட் டமாக்கா ஆஃபர் மூலம் 28,500 ரூபாய் மதிப்புள்ள கேனான் 300-D கேமராவை சலுகை விலையில் 26,500 ரூபாய்க்கு ஆர்டர் செய்துள்ளார்.

கேமராவை வினோத் தனது கோடக் மகேந்திரா வங்கி மூலம் 12 மாதம் இ.எம்.ஐ தவணை முறையில் வாங்கியுள்ளார். இன்று காலை ஃபிளிப்கார்ட் நிறுவனத்தில் இருந்து கேமரா பார்சலில் டெலிவரி ஆகியுள்ளது.
ஆசையாக பார்சலை திறந்து பார்த்த வினோத்திற்கு அதிர்ச்சி தான் பரிசாக காத்திருந்தது. கேனான் கேமரா சீல் இடப்பட்ட பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் பெயிண்ட் டப்பா மற்றும் பழைய பொம்மை கேமரா ஒன்றும் இருந்துள்ளது.
இதையடுத்து, அவர் ஆன்லைன் நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசியபோது உரிய பதில் கிடைக்கவில்லை. வருத்தமடைந்த வினோத் இந்த சம்பவம் குறித்து புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதற்கு முன்பும் இதேபோல், ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் நபர்களிடம் பலவிதமான மோசடி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. எனவே பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என காவல் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மற்ற செய்திகள்
