யாரெல்லாம் 'அந்த நாட்டுக்கு' போக போறீங்க...? 'இந்தியால' இருந்து வர்றவங்க கண்டிப்பா 'இதெல்லாம்' பண்ணியாகணும்...! - எக்கச்சக்கமான 'கட்டுப்பாடுகளை' அறிவித்துள்ள நாடு...!
முகப்பு > செய்திகள் > உலகம்இனிமேல் இந்தியாவில் இருந்து அபுதாபிக்கு வருவோர் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய தகவல்களை அபுதாபி அரசு வெளியிட்டுள்ளது.
தற்போது இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை குறையத் தொடங்கியுள்ள நிலையிலும், மூன்றாம் அலை குறித்த அச்சம் அனைவரிடமும் இருக்கிறது என்று தான் சொல்லவேண்டும். இந்த அச்சம் உலக நாடுகளையும் விடவில்லை. தற்போது இந்தியாவில் இருந்து அபுதாபி வருவோருக்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது அபுதாபி அரசு.
அதாவது, பசுமை பட்டியலில் இல்லாத இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அபுதாபி வருவோர் கட்டாயமாக 12 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதுமட்டுமில்லாமல், தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே தங்களது நாட்டுக்கு வர வேண்டும் என்ற கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
அரபு நாட்டு விமான நிலையத்தில் கண்டிப்பாக கொரோனாவுக்கான பி.சி.ஆர் பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும் எனவும், விமான நிலையத்தில் குடியேற்ற பிரிவு சோதனை நிறைவு பெற்றதும் அவர்களுக்கு மருத்துவத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட கைப்பட்டைகள் (wristband) அணிவிக்கப்படும்.
அதன் பின்னர், அவர்கள் 12 நாட்கள் வீடுகளிலோ அல்லது நிறுவன தனிமைப்படுத்துதலிலோ கட்டாயம் தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.