'இந்தியா' உண்மையாவே 'கிரேட்' நாடு...! தாலிபான்களை வளர்த்து விட்டது 'அவங்க' தான்...! - 'ரகசிய' இடத்தில் பதுங்கியிருக்கும் 'ஆப்கான்' பாப் ஸ்டார்...!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கான் மக்களின் இந்த நிலைக்கு முக்கிய காரணம் பாகிஸ்தான் என பெண் பாப் நட்சத்திரமான ஆர்யானா சயீது கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானை தாலிபான் தீவிரவாத படை கைப்பற்றிய நிலையில் அந்நாட்டில் இருக்கும் பலர் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானை சேர்ந்த பெண் பாப் நட்சத்திரமான ஆர்யானா சயீது, இந்தியாவை குறித்து கூறியதோடு, பாகிஸ்தான் நடந்துகொள்ள வேண்டிய விதத்தையும் கூறியுள்ளார்.
பாப் நட்சத்திரமான ஆர்யானா சயீது, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், 'ஆப்கானிஸ்தான் மக்கள் இப்போது இருக்கும் நிலைக்கு நான் பாகிஸ்தானைத்தான் குற்றம் சொல்வேன். தாலிபான் தீவிரவாத அமைப்பை வளர்த்துவிட்டதே பாகிஸ்தான் தான்.
ஆப்கானில் கைது செய்யப்படும் ஒவ்வொரு தாலிபான் தீவிரவாதியும் பாகிஸ்தானி. ஆப்கானிஸ்தானின் அரசியல் விவகாரங்களில் பாகிஸ்தான் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
உலக சமூகம் ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்பட தீர்வு காண வேண்டும். இனி ஆப்கான் விஷயத்தில் பாகிஸ்தான் தலையிடாமல் இருந்தாலே நன்றாக இருக்கும்.
இந்தியா எப்போதுமே பாகிஸ்தானுக்கு சிறந்த நண்பனாக இருந்துள்ளது. ஆப்கானிஸ்தான் மக்களின் மீது அகதிகள் மீது அக்கறையுடன் செயல்பட்டுள்ளது. நாங்கள் இந்தியாவுக்குக் கடமைப்பட்டுள்ளோம்' எனக் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்த சமயத்தில், ஆர்யானா சயீது அதனை எதிர்த்து பாப் ஸ்டாராக உருவெடுத்தார். மீண்டும் ஆப்கானில் தாலிபான் ஆட்சி வந்த பிறகு ஆர்யானா நாட்டைவிட்டு வெளியேறினார். இதுவரை அவர் எங்கு இருக்கிறேன் என்பதை அவர் ரகசியமாகவே வைத்துள்ளார்.

மற்ற செய்திகள்
