'தாலிபான்களோட மனசு குளிர்ற மாதிரி...' சீனா வெளியிட்ட 'செம' தகவல்...! 'எங்களுக்கும் சப்போர்ட்டுக்கு ஆளு வந்தாச்சு...' - குஜாலான தாலிபான்கள்...!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சி அமைய உள்ள நிலையில், தாலிபான்கள் அரசை சீனா அங்கீகரித்துள்ளது.
ஆப்கானில் நிலவி வந்த குழப்பத்திற்கு முடிவு கட்டும் விதமாக தாலிபான்களின் இடைக்கால ஆட்சி அமைந்ததில் மிகவும் மகிழ்ச்சி என சீனா தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் மூன்று வார கால குழப்பம் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாகவும், ஆப்கான் உள்நாட்டு விவகாரங்களில் தங்களின் எந்த தலையீடும் இருக்காது என்றும், ஆப்கானிஸ்தானில் காணப்படும் எல்லா பயங்கரவாத அமைப்புகளையும் தகர்த்து எறிய வேண்டும் என்றும் சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.
அதுமட்டுமில்லாமல், ஆப்கானிஸ்தானுக்கு உணவுப் பொருட்கள், கொரோனா தடுப்பூசிகள் என 31 மில்லியன் டாலர் மதிப்புக்கு உதவிகள் உடனடியாக வழங்கப்படும் என சீன வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தாலிபன்களின் அரசை ஆதரிக்க அமெரிக்கா அவசரம் காட்டாது என வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆப்கானில் இன்னும் பல அமெரிக்கர்கள் உள்ளனர். அவர்களை மீட்பது குறித்து தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் உள்துறை அமைச்சராக இருப்பவர் ஹக்கானி அமைப்பை சேர்ந்த தீவிரவாதி எனவும், அவரது தலைக்கு ஏற்கனவே விலை நிர்ணயித்து உள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.