உங்க மேல வச்சுருக்க 'மரியாதைய' கெடுத்துக்காதீங்க...! 'அவ்ளோ தான் சொல்ல முடியும்...' 'அப்புறம் உங்க தலைவிதி...' - இந்தியாவிற்கு கடும் 'எச்சரிக்கை' விடுத்த தாலிபான்கள்...!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கான் தலைநகர் காபூலை தாலிபான்களால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில், தாலிபான்களின் கை ஓங்கி வருகிறது. இந்த நிலையில், தாலிபான் கத்தார் மாகாண செய்தித் தொடர்பாளர் சுஹைல் சாஹீன் இந்தியாவை எச்சரிக்கும் வகையில் கருத்தை தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், 'எங்கள் தாலிபான் அமைப்பிற்கு ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் இந்தியா தலையிடுவது பிடிக்கவில்லை. அதோடு, இந்தியா ஆப்கான் அரசிற்கு ஆதரவாக ராணுவ ரீதியிலான நடவடிக்கைகளிலும் ஈடுபட கூடாது. இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால், இந்தியா தனது தலைவிதியை அதுவே எழுதிக்கொள்கிறது என்று அர்த்தம்.
அதே சமயம், இந்தியா ஆப்கானில், சல்மா அணை, சாலை மற்றும் பிற உட்கட்டமைப்பு திட்டங்கள் போன்றவற்றை மேற்கொள்ள மனிதாபிமான அடிப்படையில் பல முயற்சிகள் மேற்கொண்டதையும், மக்களுக்கு, அணைகள், தேசிய திட்டங்கள், உட்கட்டமைப்பு மற்றும் ஆப்கானிஸ்தானின் வளர்ச்சி அதன் புனரமைப்பு, பொருளாதாரச் செழிப்பு என ஆப்கானிஸ்தான் மக்களுக்காக இந்தியா செய்துள்ள அனைத்தையும் நாங்கள் மனதார பாராட்டுகிறோம், அது மட்டுமல்லாமல் உங்கள் மேல் மிகுந்த மரியாதையும் உள்ளது' என சாஹீன் பாராட்டியுள்ளார்.
இந்தியாவை பாராட்டிய நிலையில், ஆப்கானிஸ்தான் அரசிற்கு ஆதரவாக ராணுவ உதவிகள் எதுவும் இந்தியா வழங்கக் கூடாது என எச்சரித்துள்ளது.

மற்ற செய்திகள்
