'25 முறை வெவ்வேறு ஆண்களுடன் ஓடிய மனைவி'... 'நொந்து நொறுங்கிப்போன குடும்பம்'... 'ஆனா கணவன் வாயிலிருந்து வந்த ஒரே வார்த்தை'... இப்படி ஒரு மனுஷனா?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Sep 09, 2021 04:58 PM

25 முறை தனது மனைவி வீட்டை விட்டு ஓடிய நிலையில், கணவன் சொன்ன அந்த வார்த்தையைக் கேட்டு குடும்பமே நெகிழ்ந்து போனது.

Assam woman Eloped 25 times with different men

அசாம் மாநிலத்தின் Nagaon மாவட்டத்தைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளில் 25 முறை வெவ்வேறு ஆண்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் வீட்டை விட்டுச் செல்லும் அளவிற்குச் சென்று, 25 முறை வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

Assam woman Eloped 25 times with different men

10 ஆண்டுகளுக்கு முன்னர் அந்த பெண்ணுக்குத் திருமணம் ஆன நிலையில், அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அதில் கடைசியாக 3 மாதத்திற்கு முன்னர் குழந்தை ஒன்று பிறந்தது. இந்த சூழ்நிலையில் மீண்டும் ஒரு நபருடன் அவர் வீட்டை விட்டு ஓடியது தான் சோகத்தின் உச்சம். சம்பவம் நடந்த செப்டம்பர் 4-ஆம் தேதி, ஓட்டுநரான அந்த பெண்ணின் கணவர் வேலை முடிந்து திரும்பிய போது, மனைவி வீட்டில் இல்லை.

தன்னுடைய மூன்று மாத குழந்தையை அருகில் உள்ள வீட்டில் கொடுத்துவிட்டு, ஆட்டிற்குப் புல் எடுத்துவிட்டு வருவதாகக் கூறி  சென்றுள்ளார். பின்னர் வீட்டின் உள்ளே கணவன் பார்த்த போது, பீரோவில் இருந்த 22,000 ரூபாய் மற்றும் சில தங்க ஆபரணங்களை அவர் எடுத்து கொண்டு மாயமாகியுள்ளார் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து அந்த பெண்ணின் மாமனார் கூறும்போது, ''திருமணம் முடிந்ததிலிருந்து சுமார் 20-ல் இருந்து 25 முறை அவர் வெவ்வேறு ஆண்களுடன் ஓட்டம் பிடித்துள்ளார். வீட்டை விட்டு ஓடிய சில நாட்களுக்குப் பிறகு, ஒவ்வொரு முறையும் திரும்பி வருவார். ஆனால் குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு எனது மகன் அவரை ஏற்றுக் கொள்வார்.

Assam woman Eloped 25 times with different men

ஆனால் தற்போது பிறந்து மூன்று மாதமே ஆன குழந்தையைப் போட்டு விட்டுப் போனதை தான் மனது ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் இதுகுறித்து எனது மகன் கூறும்போது, ''என்ன இருந்தாலும் அவள் எனது மனைவி. குழந்தைகளின் நலன் கருதி அவளை நான் மீண்டும் ஏற்றுக் கொள்வேன்'' எனக் கூறியதாக அந்த பெண்ணின் மாமனார் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Assam woman Eloped 25 times with different men | India News.