'அவரு' ஒரு தடவ மட்டும் 'ட்ரக்' யூஸ் பண்ணல...! எங்களுக்கு கெடச்ச 'எவிடன்ஸ்'ல... - போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரி கூறிய 'அதிர்ச்சி' தகவல்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆர்யன் கான் வழக்கமாக போதைப்பொருள் வாங்குபவர் என்பதற்கான சான்று உள்ளது என்றும், அவரிடம் வேறு எந்த போதைப்பொருட்களும் இல்லை என்று கூறுவது தவறானது என்றும் தேசிய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.

மும்பை சொகுசுக்கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானின் ஜாமீன் மனு மீதான விசாரணை மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த விசாரணையில் பதிலளித்த தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அனில் சிங், " ஆர்யன் கான் ஒரு முறை மட்டும் போதை மருந்து உட்கொள்ளவில்லை, கிடைத்த அறிக்கையின்படி அவர் கடந்த சில ஆண்டுகளாகவே அதை உபயோகித்து வருவது தெரிகிறது. அர்பாஸ் என்பவரிடம் இருந்து ஆறு கிராம் சரஸ் என்கிற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டபோது ஆர்யன் கானும் அவருடன் இருந்தார்" என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என அனில் சிங் வாதிடுகையில், "இது மகாத்மா காந்தி பிறந்த மண், இதுபோன்ற போதைப்பொருள் புழக்கம் சிறுவர்களை, இளைஞர்களை ரொம்ப பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது. விசாரணை ஆரம்ப நிலையில் தான் உள்ளது, எனவே இது ஜாமீன் வழங்குவதற்கான நேரம் அல்ல" என்று அவர் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
