'கொரோனா சிகிச்சைக்கான முதல் மருந்து'... 'பார்மசிகளில் அடுத்த வாரம் முதல் விற்பனை'... 'அதிரடி காட்டும் நாடு!'...
முகப்பு > செய்திகள் > உலகம்ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் முதல் மருந்து அடுத்த வாரம் முதல் விற்பனைக்கு வரவுள்ளது.

ரஷ்யாவில் கொரோனா வைரஸால் லேசான மற்றும் மிதமான அளவில் பாதிக்கப்பட்டு வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு கொரோனாவிர் என்ற மருந்து பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் ரஷ்யாவில் கொரோனாவுக்கான அவிபேவிர் என்ற மருந்துக்கு அனுமதி கிடைத்த பின்னர் கொரோனாவிர் என்ற 2வது மருந்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த மருந்து அடுத்த வாரம் முதல் மருந்து கடைகளில் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த இரு மருந்துகளும் பேவிபிரவிர் எனும் மருந்தினை அடிப்படையாக கொண்டது. இந்த மருந்து ஜப்பானில் உருவாக்கப்பட்டு வைரஸுக்கு எதிரான சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. இதுதவிர ஸ்புட்னிக்-வி என்ற தடுப்பூசியின் வினியோகத்திற்கு பல்வேறு சர்வதேச நாடுகளுடன் ரஷ்யா ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த கொரோனவிர் மருந்து 168 கொரோனா நோயாளிகளுக்கு பரிசோதனை முயற்சியாக அளிக்கப்பட்டு அதன் 3வது கட்ட முடிவில் ஒப்புதல் கிடைத்துள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க, இந்த மருந்துக்கு முதலில் கடந்த ஜூலையில் ஒப்புதல் வழங்கப்பட்டு இருந்தது என அந்நாட்டு அரசு ஆவண பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
