'தண்ணியில கலந்து குடிக்கும் கொரோனா மருந்து...' '110 பேர வச்சு டெஸ்ட் பண்ணியிருக்கோம்...' - ஒப்புதல் அளித்த மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா மருந்தை இனி தண்ணீரில் கலந்து குடிக்கும் வகையில் பவுடர் வடிவில் கண்டுபிடித்துள்ளது மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு.

உலகில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து, அனைத்து உலக நாடுகளும் வித விதமாக கொரோனா தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்து வருகின்றன.
இந்நிலையில் மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (Defence Research and Development Organisation) தண்ணீரில் கலந்து குடிக்கும் வகையில் பவுடர் வடிவில் கொரோனா மருந்தை கண்டுபிடித்துள்ளது.
இந்த மருந்துக்கு மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பும் அவசர கால பயன்பாட்டின் அடிப்படையில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிகழ்வு கொரோனா தடுப்பு சிகிச்சையில் ஒரு புதிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், டிஆர்டிஓ அமைப்பு ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரீஸ் அமைப்புடன் சேர்ந்து உருவாக்கியுள்ளது. இந்த மருந்துக்கு டிஆக்ஸி டி- குளுகோஸ் (2-deoxy-D-glucose (2-DG) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட பரிசோதனையில் இருக்கும் இந்த மருந்தை, 110 கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்து வழங்கப்பட்ட போது, நோயாளிகள் தொற்றிலிருந்து வேகமாகக் குணமடைவதும் தெரியவந்துள்ளது.
அதோடு கொரோனா தொற்று நோயாளிகள் ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது முடிவு நெகட்டிவ் என வந்துள்ளது. மூன்றாவது கட்ட பரிசோதனை தற்போது நாடு முழுவதும் 6 மருத்துவமனைகளில் நடந்துவருகிறது. இந்த டிஆக்ஸி டி- குளுகோஸ் சந்தைக்கு வந்தால் ரெம்டெசிவிரை மட்டுமே நம்பியிருக்கும் சூழல் மாறலாம் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

மற்ற செய்திகள்
