கிண்டி டூ மாமல்லபுரம்.. 'ஹெலிகாப்டரை' தவிர்த்து...57 கி.மீ 'காரில்' சென்ற சீன அதிபர்.. என்ன காரணம்?
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Manjula | Oct 13, 2019 01:31 PM
இரு நாட்களுக்கு முன் தமிழகம் வந்த சீன அதிபர் ஷி ஜின்பிங் கிண்டி டூ மாமல்லபுரம் வரையிலான 57 கி.மீட்டர் தூரத்தை காரில் சென்றடைந்தார். போக்குவரத்து திருப்பி விடப்பட்டதால் சென்னைவாசிகள் பலரும் திணறித் தவித்தனர்.
இந்தநிலையில் சீன அதிபர் 57 கி.மீ தூரத்தை காரில் சென்றதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது தங்கள் நாட்டு பொருட்களை விளம்பரம் செய்வதற்காக ஜின்பிங் எங்கு சென்றாலும் தன்னுடைய ஹாங்கி காரில் பயணிப்பதையே வழக்கமாக கொண்டிருக்கிறார்.
18 அடி நீளமும் 6.5 அகலமும் கொண்ட இந்த ஹாங்கி கார் 5 அடி உயரம் கொண்டது. சுமார் 3,152 கிலோ எடை கொண்ட இந்த கார் 8 விநாடிகளில் 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும் திறன் கொண்டது. சீன அதிபர் ஜி ஜின்பிங் எங்கு சென்றாலும் அவருக்கு முன்னதாகவே இந்த கார் சென்றுவிடும். அதேபோன்று இந்த காரை, சீன ஓட்டுநர் மட்டுமே இயக்குவார்.
சீன அதிபர்கள், அதிகாரிகள், அமைச்சர்கள் பயன்பாட்டிற்காக தயாரிக்கப்படும் இந்த ஹாங்கி ரக கார்கள் மிகவும் விலை உயர்ந்தவை. எந்த ரக துப்பாக்கியின் குண்டும் துளைக்காத வண்ணம் இந்த கண்ணாடிகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. சீன அதிபர் பயன்படுத்தும் இந்த காரின் விலை சுமார் 6 கோடி ரூபாயாம்.