'பரிசோதிக்கப்படும்' 3-ல் ஒருவருக்கு கொரோனா 'பாஸிடிவ்...' 'எல்லை மீறி போய் விட்ட நகரம்...' 'அதிர்ச்சி' அளிக்கும் 'ரிப்போர்ட்...'
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் காட்டுத் தீ போல கொரோனா பரவி வரும் நிலையில், டெல்லியில் பரிசோதனைக்கு உள்ளாக்கப்படும் மூவரில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் தலைநகரான டெல்லியில் இதுவரை 41,182 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 1,327 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 7,353 பேரில், 2,224 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 3 பேரில் ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 7 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், மூன்றில் ஒரு பகுதியினருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 34,977 பேரில், 11, 239 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் ஜூன் 8 ஆம் தேதியில் இருந்து 14 ஆம் தேதி வரை பாதிப்பு எண்ணிக்கை 32 .13 சதவீதம் அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
டெல்லியில் தற்போது 5,137 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 695 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும், 182 பேர் வென்டிலேட்டர் உதவியுடனும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
20,793 கொரோனா நோயாளிகள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். டெல்லியில் இதுவரை 222 பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூன் 20 ஆம் தேதி முதல் நாள்தோறும் 18,000 பரிசோதனைகளை மேற்கொள்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.