'ட்ரெயின்ல நாங்க சீட் புடிச்சு தரோம்மா...' 'சிறுமியை ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு கூட்டிட்டு போய்...' 'டெல்லியில் நடந்த...' பதற வைக்கும் கூட்டு பாலியல் வன்கொடுமை...!
முகப்பு > செய்திகள் > இந்தியா16 வயது சிறுமி வேலை முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த போது மர்ம நபர்கள் சிலர் போதை பொருள் கொடுத்து கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
16 வயது சிறுமி ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை வேலை முடிந்து வீட்டுக்கு செல்ல ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தை அடைந்துள்ளார். அங்கிருந்து புது தில்லி ரயில் நிலையத்திற்கு சென்று ஜார்கண்ட் ரயிலை பிடித்து வீட்டிற்கு செல்ல திட்டமிட்டுள்ளார். டெல்லியில் இருந்து ரயில் ஏற உதவுவதாக மர்ம நபர்கள் சிலர் அச்சிறுமியை அணுகியுள்ளனர்.
ரயிலில் சீட் கிடைக்கவேண்டும் என அச்சிறுமியும் உதவிக்கு ஒத்துக் கொண்டுள்ளார். ஆனால் மர்ம நபர்கள் சிறுமியை சாப்பிட போலாம் என ரெயில்வே நிலையத்தின் ஆள் அரவம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். மேலும் மது மற்றும் போதை பொருட்களை உட்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தியுள்ளார்.
என்ன செய்வதென்று அறியாத சிறுமி, போதை மருந்து உட்கொண்டுள்ளார். பின் மர்ம நபர்கள் அனைவரும் போதையில் இருந்த சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அதன்பின் சிறுமியை அப்படியே விட்டும் சென்றுள்ளனர்.
மயக்கத்தில் இருந்த சிறுமி நிலைதடுமாறி நடந்து சென்ற சிறுமியை அப்பகுதியில் இருக்கும் போலீசார் கவனித்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து கூறிய கொட்வாலி காவல் நிலைய அதிகாரிகள் 'பெண் காவலர் சிறுமியிடம் பேசி நடந்த சம்பவங்களை பற்றி எங்கள் பெண் அதிகாரிகள் அவளுடன் தொடர்புகொண்டு குற்றம் பற்றி அறிந்து கொண்டனர். சிறுமிக்கு உணவளித்து பின் மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டது.' எனக் கூறினார்.
மேலும் சம்பவம் நிகழ்ந்த வேளையில் சிறுமி போதையில் இருந்ததால், எந்த இடத்தில் குற்றம் நடந்தது பற்றி தெரியவில்லை. மேலும் இப்போது கடினமான தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் வழக்கை விரைவில் தீர்த்து குற்றவாளிகளைப் பிடிப்போம்' என அதிகாரி கூறினார்.