1,500 கொரோனா 'நோயாளிகள்' மிஸ்ஸிங்... 'டெஸ்ட்' பண்ண வந்தவங்க 'இப்படி' ஒரு விஷயம் பண்ணிருக்காங்க... தலைசுற்றி நிற்கும் 'மாநிலம்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாநாடு முழுவதும், நாளுக்கு நாள் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், டெல்லி மாநிலத்தில் சம்பவம் ஒன்று டெல்லி சுகாதாரத்துறை அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

டெல்லி மாநிலத்தில் மட்டும் சுமார் 1500-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் மாயமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அம்மாநிலத்தில் கொரோனா மூலம் பரிசோதனை செய்யப்படுவோர் தங்களது தவறான முகவரி மற்றும் செல்போன் எண்களை வழங்கியுள்ளனர். இதனால் அவர்களுக்கு கொரோனா உறுதியான பிறகும் பின்தொடர்வதில் சிக்கல் எழுந்துள்ளது.
இதில் அதிகபட்சமாக பரிதாபாத் பகுதியில் 1000 பேரும், குர்குராம் பகுதியில் 266 பேரும், 124 பேர் காசியாபாத் பகுதியில் மாயமாகியுள்ளனர்.ஒரு நோயாளியின் மருத்துவ தகவல்கள் மாதிரி எடுப்பதற்கு முன் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் மொபைல் செயலியில் அவர்களது தகவல் பதிவேற்றப்படும். நோயாளியின் மொபைல் எண்ணில் OTP அனுப்பப்படும். ஆனால் இதில் பலர் தனியார் ஆய்வகங்களில் சோதனை செய்ததால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 1500 கொரோனா நோயாளிகளை கண்டுபிடிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள், டெல்லி போலீசார் உதவியை நாடியுள்ளனர். இதுவரை, காசியாபாத் பகுதியை சேர்ந்த 65 நோயாளிகளை கண்டுபிடித்து மறுத்தவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். மீதமுள்ளோரை கண்டுபிடிக்கும் பணியில் மிக தீவிரமாக அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை டெல்லி மாநிலத்தில் சுமார் 94 ஆயிரம் பேர் கொரோனா மூலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 2,900 பேர் வரை கொடிய தொற்று மூலம் உயி4ரிழந்துள்ளது குறிப்பிடதக்கது.

மற்ற செய்திகள்
