'நேத்து போன்ல நல்லா தான் பேசுனாங்க'... 'ரசிகர்களின் இதயத்தைச் சுக்கு நூறாக உடைத்த சியா'... அதிர்ச்சி சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாசமீபத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை ஏற்படுத்திய சோகத்திலிருந்து, ரசிகர்கள் இன்னும் மீளாத நிலையில், மீண்டும் ஒரு சோக சம்பவம் நடைபெற்றுள்ளது.

டிக்டாக்கில் 1.1 மில்லியன் ரசிகர்கள் கொண்டவரும் பிரபல நடனக் கலைஞருமான சியா கக்கருக்கு 16 வயது தான் ஆகிறது. இவருக்குச் சமூகவலைத்தளங்களில் ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இந்த சூழ்நிலையில் அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதை அவரது மேலாளர் அர்ஜுனன் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளார். புது டெல்லியில் உள்ள ப்ரீத் விஹாரில் அவரது வீட்டில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சியா கக்கர் டிக் டாக்கில் மிகவும் பிரபலமானவர். அவரது நடன திறமைக்காக அவரை அதிக அளவு ரசிகர்கள் விரும்பினார்கள். ஆனால் அவரது சொந்த வாழ்க்கையில் பிரச்சினைகள் இருந்திருக்கலாம் என அவரது மேலாளர் மேலும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ''நேற்று இரவு தான் அவரிடம் பேசினேன். புதிதாகச் செய்ய இருக்கும் வேலை குறித்து இருவரும் பேசினோம். அப்போது அவர் சகஜமாகத் தான் பேசினார். ஆனால் ஒரு திறமையானவரை இழந்து விட்டோம்'' எனக் கூறியுள்ளார்.
6 நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் ஒரு பஞ்சாபி பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டிருந்தார். இதனிடையே அவருடைய தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள், மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 போன்றவற்றைத் தொடர்பு கொண்டால் இலவசமாக ஆலோசனைகள் பெறலாம்.

மற்ற செய்திகள்
