"கொரோனாவால கம்பெனிகள் எல்லாம் ஆட்குறைப்பு, சம்பள குறைப்பு பண்ணிகிட்டு இருக்கு!".. ஆனா இந்த நிறுவனம் பண்றத பாருங்க! வேறலெவல்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்த கொரோனா சூழலில் உலகமே பொருளாதார சரிவால் முடங்கியுள்ள நிலையில், பல நிறுவனங்களும் ஆட்குறைப்பு செய்யவும், சம்பளத்தை குறைக்கவும் செய்துள்ளன.
இந்தியாவைப் பொருத்தவரை மில்லியன் கணக்கானோர் வேலையை இழந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் இந்தியாவின் பல்வேறு கூட்டுத் தயாரிப்புகளைச் செய்துவரும் சஹாரா குழும நிறுவனம் அவ்வாறு தங்கள் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யவில்லை மற்றும் சம்பளக் குறைப்பு செய்யவில்லை என்பதுடன், மாறாக கூடுதல் ஊழியர்களை வேலைக்கு எடுத்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், சுமார் 4 லட்சம் ஊழியர்களுக்கு புரொமோஷனும், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு சம்பள உயர்வுடன் கூடிய புரொமோஷனும் வழங்கப்பட்டுள்ளது. 14 லட்சம் ஊழியர்களைக் கொண்டு சஹாராக் குழும நிறுவனம் கண்டிப்பாக தமது நிறுவனத்தில் ஆட்குறைப்பு மற்றும் சம்பளக் குறைப்பு இருக்காது என உறுதிபடத் தெரிவித்துள்ளது.
இதுபற்றி பேசிய சஹாரா குழும முதன்மை அதிகாரி, சுபத்ரா ராய், “இதுபோன்ற இக்கட்டான சூழலில்தான் நிறுவனங்கள் தம் குடும்ப ஊழியர்களின் பொருளாதார மற்றும் பணிப்பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இந்த சூழலில் அவர்களைப் பார்த்துக்கொண்டால், அதுதான் மனிதநேய ரீதியாகவும், சமூக ரீதியாகவும் நாம் ஆற்றும் பெரும் பங்கு என்பதும் அதனால் நிறுவனத்துக்கு அவர்கள் பெரும்பங்கு ஆற்றுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது” என்று அவர் பேசியுள்ளார்.