'இறந்து' கிடந்தவர்களின்.. 'கைகளில்' ஆயுதங்கள்.. வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Dec 06, 2019 05:35 PM

பிரியங்கா ரெட்டி மரணம் தொடர்பாக என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்ட குற்றவாளிகளின் உடல்கள் இன்னும் சம்பவ இடத்திலேயே இருக்கின்றன. போலீஸ் சார்பில் சில சம்பிரதாயங்கள் இருப்பதாகவும், அவை முடிந்தவுடன் குற்றவாளிகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மாபூப்நகர் மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்படும் என்றும் கூறப்படுகிறது.

convicts holding weapons on their hand, video goes viral

தற்போது குற்றவாளிகளின் உடல்கள் கிடக்கும் இடத்தை சுற்றிலும் தற்காலிக தடுப்பு ஒன்றை போலீசார் அமைத்துள்ளனர். பொதுமக்கள் யாருக்கும் உள்ளே அனுமதி அளிக்கப்படவில்லை. அதே நேரம் பத்திரிகையாளர்களுக்கு குற்றவாளிகளின் உடலை புகைப்படம், வீடியோ எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இறந்து கிடக்கும் குற்றவாளிகளின் கையில் ஆயுதம் இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தங்களை தாக்கி விட்டு தப்பியோட முயற்சி செய்ததால், குற்றவாளிகளை சுட்டு கொலை செய்ததாக ஹைதராபாத் போலீசார் விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.