ப்ளே ஸ்டோரில் இருந்து ஆயிரக்கணக்கான செயலிகள் நீக்கம்..! கூகுள் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை..!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Selvakumar | Jun 26, 2019 10:54 PM

கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி செயலிகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Two thousand fake apps removed from Google play store

ப்ளே ஸ்டோரில் போலி செயலிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாவதை கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் கடந்த வருடம் ப்ளே ப்ரோடெக்ட் என்னும் பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இதன்மூலம் ஆயிரக்காணக்கான போலி செயலிகள் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டன.

ஆனால் இதுபோன்ற பாதுகாப்பு அம்சங்களை தாண்டியும் ப்ளே ஸ்டோரில் போலி செயலிகள் வருவதாக தகவல்கள் வந்துள்ளன. போலி செயலிகள் பெரும்பாலும் உண்மையான செயலிகளைப் போலவே பெயர், புகைப்படம் ஆகியவற்றுடன் வெளியாகிறது. இதனால் பயனர்கள் எளிதாக ஏமாற வாய்ப்பு உள்ளது.

இதனால் தற்போது 2 ஆயிரத்துக்கும் அதிகமாக போலி செயலிகளை ப்ளே ஸ்டோரில் இருந்து கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு செயலியின் உண்மை தன்மையை கண்டறிய அதை எவ்வளவு பேர் டவுன்லோட் செய்துள்ளனர், எவ்வளது பேர் கருத்து கூறியுள்ளனர் என்பதை வைத்து அது போலியா இல்லை உண்மையான செயலியா என்பதை கண்டறிய முடியும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : #GOOGLE #GOOGLEPLAYSTORE #FAKE #APP