'நடைமேடையில் தூங்கியபோது'... ‘அதிகாலை எழுந்துப்பார்த்தால்’... ‘அதிர்ச்சியில் உறைந்த தம்பதி'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Aug 13, 2019 07:14 PM
நடைமேடையில் தூங்கிக் கொண்டிருந்தபோது, துப்புரவு தொழிலாளியின் 3 வயது பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் சந்தை விளை பகுதியைச் சேர்ந்தவர் சடையன். இவர் மற்றும் இவரது மனைவி தேவி, மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். வழக்கம்போல் துப்புரவு பணிகளை முடித்து விட்டு, நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்திற்கு வந்தனர்.
அப்போது வீட்டிற்குச் செல்ல பேருந்து இல்லாததால், தங்களது 3 வயது பெண் குழந்தை வீரம்மாளுடன், பேருந்து நிலைய நடைமேடையில் தூங்கினர். அதிகாலை எழும்பி பார்த்தபோது, அருகில் படுத்திருந்த தங்களது குழந்தையை காணததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவர்கள், உடனடியாக கோட்டார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். குழந்தையை இழந்த சடையன் தம்பதி, காணாமல் போன குழந்தையை நினைத்து தவித்து வருகின்றனர்.
