'கொரோனாவை கட்டுப்படுத்தும் தமிழகம்...' 'கூடுதல் கண்காணிப்புடன் மருத்துவக்குழு...' தமிழக அரசின் சிறப்பான துரித நடவடிக்கைகள்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் இதுவரை 223 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மக்கள் கூட்டமாக கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.
![Effective measures of the Government of TN to control the corona Effective measures of the Government of TN to control the corona](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/effective-measures-of-the-government-of-tn-to-control-the-corona.jpg)
இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையில் நாட்டிலேயே முதன்மையாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் 1.80 லட்சம் பேருக்கு கொரோனா குறித்த பரிசோனை நடந்துள்ளது. மேலும், தினமும் 500 பேருக்கு பரிசோதனை செய்வதற்கான ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, சென்னை ஐகோர்ட்டில் அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அதிக அளவிற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருந்தும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையிலான அமைச்சர் குழு துரித நடவடிக்கைகளாலும், புத்திசாலித்தனமான செயல்பாட்டினாலும் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வருகிறது.
தமிழக மருத்துவ துறை சார்பில் தினசரி மருத்துவக் குறிப்பு வெளியிடப்படுகிறது. சென்னை, திருவாரூர், தேனி, நெல்லை, கிங் இன்ஸ்டிடியூட் ஆகிய 5 இடங்களில் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டு பரிசோதனைகள் நடைபெறுகிறது. ஒரு நாளைக்கு 100 பேர் வீதம் இந்த 5 இடங்களிலும் 500 பேர் பரிசோதனை செய்யப்படுகிறார்கள். மத்திய அரசின் ஒப்புதலுடன் இது நடைபெறுகிறது. இந்த பரிசோதனைக்கு கட்டணம் வாங்குவதில்லை. 19.03.2020 அன்று மட்டும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 38 பேருக்கு பரிசோதனை நடைபெற்று இருக்கிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும், ரெயில் நிலையங்களிலும் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. முக கவசங்கள், கருவிகள் எல்லாம் போதுமான அளவில் உள்ளன. கூடுதலாக ரூ. 60 கோடி நிதியை முதல்வர் ஒதுக்கி இருக்கிறார். இதில் மக்கள் நல்வாழ்வு துறைக்கு மட்டும் ரூ. 30 கோடி ஒதுக்கி இருக்கிறார்.
மேலும் சுகாதாரத்துறை அமைச்சர் கொரோனா குறித்த தகவல்களை உடனுக்குடன் தனது டிவிட்டர் கணக்கில் பகிர்ந்து வருகிறார்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)