'ரூ. 52 ஆயிரத்திற்கு ‘சரக்கு’ பில்...' '48 லிட்டர்...' '128 பாட்டில்...' 'குடிமகனின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை...'

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | May 05, 2020 09:04 AM

பெங்களூரில் உள்ள ஒரு  கடையில் ₹52,841-க்கு மதுபானம் வாங்கியதற்கான பில்  ஒன்று வாட்ஸ் அப்பில்  வைரலாகி வருகிறது. இதையடுத்த மொத்தமாக ஒருவருக்கு மதுபானத்தை விற்பனை செய்த கடை ஊழியர் மீது, அம்மாநில கலால் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Bill for purchase of liquor for 52,000 rupees. Viral on WhatsApp

கொரோனா முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட பிறகு 46 நாட்கள் கழித்து கர்நாடகாவில் நேற்று மதுக்கடைகள் திறக்கப்பட்டது. இதையடுத்து , பெங்களூருவில் உள்ள மதுபான கடை ஒன்றில் 48 லிட்டர் அளவிற்கு மதுபானங்களை வாங்கிச் சென்ற ஒருவர், அதற்கான ரசீதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். 6 ஒரு லிட்டர் மதுபான பாட்டில்,  12 புல், 50 ஆப்,  18 பீர் மற்றும் 42 குவாட்டர் என மொத்தம் 17 வகையிலான,  128 பாட்டில்  மதுபானங்கள் வாங்கப்பட்டதாக, அந்த பில்லில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த பதிவு இணையத்தில்  வைரலானதை  அடுத்து, சில்லறை வர்த்தகக் கடையில்  மொத்தமாக விற்பனை செய்த குற்றத்திற்காக கடை ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுபானங்களை வாங்கிச் சென்றவர் மீது வழக்குப்பதிய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதேபோன்று பல்லாயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மதுபானங்களை ஏராளமானோர் வாங்கிச் சென்றுள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 45 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே கர்நாடகா மாநிலம் கோலாரில் மதுபான கடைகள் திறக்கப்பட்டதை ‘குடி’மகன்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். 40 நாட்களுக்கு பின்னர் கடை திறக்கப்பட்டதால், அதை கொண்டாட பட்டாசுடன் வந்ததாக அந்த குஷியான ‘குடி’மகன் தெரிவித்தார். ஆனால், இவர்கள் செய்த அலம்பல் அந்தப்பகுதி மக்களிடம் பெரும் எரிச்சலை ஏற்படுத்தியது.