பீட்சா வந்து குவிஞ்சிட்டே இருக்கு...! 'சாமி சத்தியமா நான் ஆர்டர் பண்ணலங்க...' இதெல்லாம் யாரோட வேலை...? 'குழம்பி தவித்த பெண்...' ஃபேஸ்புக்கில் காத்திருந்த அதிர்ச்சி...!
முகப்பு > செய்திகள் > இந்தியாபெங்களூர் அருகே எலகங்கா நியூ டவுன் பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவருக்கு சமீபகாலமாக தினமும் பீட்சா வந்துள்ளது. இதற்கு சில நாட்களுக்கு முன்பு தான் இளைஞர் ஒருவர் அந்த பெண்ணிற்கு 'உங்களை காதலிக்கிறேன், உங்களை திருமணம் செய்ய விரும்புகிறேன்' எனக் கூறியுள்ளார்.

ஆனால், சம்பந்தப்பட்ட பெண் அவரின் காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அதனையடுத்து, அந்த பெண்ணிற்கு தினமும் வீட்டிற்கும், அலுவலகத்திற்கும் பீட்சா வந்துள்ளது.
முதலில் அவரது வீட்டிற்கு பீட்சா எடுத்து கொண்டு வந்தப்போது, தான் ஆர்டர் செய்யவில்லை என்று கூறியும், அவர் பெயரில் ஆர்டர் செய்திருப்பதால் அவரே பணம் கொடுத்து பீட்சாவை பெற்றுக் கொண்டார்.
இதேபோல் தினமும் பீட்சா வரவே குழப்பத்தில் இருந்துள்ளார். மீண்டும் அந்த இளைஞர் சமூக வலைத்தளம் மூலமாக ஒரு குறுந்தகவல் அனுப்பியுள்ளார்.
அதில், 'நான் தான் உங்கள் பெயரில் பீட்சா ஆர்டர் செய்து அனுப்பி வைக்கிறேன். நீங்கள் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றால் தொடர்ந்து உங்கள் பெயரில் பீட்சாவை ஆர்டர் செய்து தொல்லை கொடுப்பேன்' என அனுப்பியுள்ளார்.
அதோடு, ' கோரமங்களாவை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் மூலம் ஆட்களை நியமித்து, உங்களை நான் தினமும் கண்காணித்து வருகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.
இளைஞர் சொன்னதை கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பெண் மர்மநபர் மீது எலகங்கா நியூ டவுன் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், தன் உயிருக்கும் அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறி உள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த இளைஞரை தேடி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
